உடம்பு தான் அங்க இருந்துச்சு.. பும்ரா காலை உடைச்சுடுவாரு.. 17 பந்தில் 50 ரன்ஸ் நொறுக்கிய.. சூரியகுமார் பேட்டி

Suryakumar Yadav 3
- Advertisement -

ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் பதினொன்றாம் தேதி நடைபெற்ற 25வது லீக் போட்டியில் பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தியது. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் போராடி 1966/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளேஸிஸ் 61, ரஜத் படிடார் 50, தினேஷ் கார்த்திக் 53* ரன்கள் எடுத்தனர்.

மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பர்மா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். பின்னர் 197 ரன்களை துரத்திய மும்பைக்கு இசான் கிசான் 69 (34), ரோகித் சர்மா 38 (24), சூரியகுமார் யாதவ் 52 (19), கேப்டன் ஹர்திக் பாண்டியா 21* (6), திலக் வர்மா 16* (10) ரன்கள் எடுத்தனர். அதனால் 15.3 ஓவரிலேயே பெங்களூருவை அடித்து நொறுக்கிய மும்பை பாண்டியா தலைமையில் 2வது வெற்றியை பெற்றது.

- Advertisement -

சூரியகுமார் பேக்:
இப்போட்டியில் அனைத்து வீரர்களும் வெற்றியில் முக்கிய பங்காற்றினாலும் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் 52 (19) ரன்கள் அடித்தது மும்பைக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. ஏனெனில் காயத்தால் ஆரம்பகட்ட போட்டிகளில் அவர் விளையாடாதது மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும் இப்போட்டியில் 17 பந்தில் 50 ரன்கள் தொட்ட அவர் தன்னுடைய அதிவேகமான ஐபிஎல் அரை சதத்தை அடித்து ஃபார்முக்கு வந்துள்ளார்.

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “எப்போதும் வான்கடே மைதானத்திற்கு மீண்டும் வருவது நல்லது. ஐபிஎல் துவங்கிய போது நான் உடலளவில் பெங்களூருவில் இருந்தேன். ஆனால் மனதளவில் நான் இங்கே தான் இருந்தேன். எப்போதும் மும்பை அணியை விட்டு வெளியேறியதாக உணரவில்லை. 200 ரன்களை சேசிங் செய்யும் போது பனியின் தாக்கத்தை பயன்படுத்தி உங்கள் வாய்ப்பை எடுக்க வேண்டும்”

- Advertisement -

“ரோகித் மற்றும் இசான் ஆகியோர் 10 ஓவரிலேயே எங்கள் வேலையை முடித்தனர். எனவே ரன் ரேட்டுக்காக நாங்கள் வேகமாக ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்பதை அறிவோம். எதிரணி வைக்கும் ஃபீல்டிங்கிற்கு தகுந்தார் போல் நான் என்னுடைய வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்க பயிற்சி எடுத்து இப்படி விளையாடுகிறேன்”

இதையும் படிங்க: அந்த ஈகோ இருந்தா நம்மள பொளந்துடுவாங்க.. வெற்றிகரமான பவுலிங்கின் 3 ரகசியம் பற்றி.. பும்ரா பேட்டி

“இஷான் கிஷனிடம் மகிழ்ச்சியுடன் விளையாடுமாறு மும்பை அணி நிர்வாகம் சொன்னார்கள். அதற்காக பேட்டிங்கில் கடினமாக உழைத்த அவர் தற்போது பழங்களை சாப்பிடுகிறார். ஒரே அணியில் விளையாடுவதால் கடந்த 2 – 3 வருடமாக நான் பும்ராவுக்கு எதிராக பேட்டிங் செய்யவில்லை. ஏனெனில் ஒன்று அவர் என்னுடைய பேட்டை உடைப்பார் அல்லது காலை உடைப்பார்” என்று கலகலப்பாக பேசினார்.

Advertisement