அந்த ஈகோ இருந்தா நம்மள பொளந்துடுவாங்க.. வெற்றிகரமான பவுலிங்கின் 3 ரகசியம் பற்றி.. பும்ரா பேட்டி

Jasprit Bumrah 3
- Advertisement -

கோடைகாலத்தில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் பதினொன்றாம் தேதி நடைபெற்ற 25வது லீக் போட்டியில் பெங்களூருவை மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 196/8 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளேஸிஸ் 61, ரஜத் படிடார் 50, தினேஷ் கார்த்திக் 53 ரன்கள் எடுத்தனர்.

மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜாஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 197 ரன்களை துரத்திய மும்பைக்கு ரோஹித் சர்மா 38, இசான் கிசான் 69, சூரியகுமார் யாதவ் 52, கேப்டன் ஹர்திக் பாண்டியா 26*, திலக் வர்மா 16* ரன்கள் அடித்து 15.3 ஓவரிலேயே எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

வெற்றிகரமான பும்ரா:
அதனால் பாண்டியா தலைமையில் மும்பை இரண்டாவது வெற்றியை பதிவு செய்த நிலையில் பெங்களூரு ஐந்தாவது தோல்வியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு மற்ற பவுலர்கள் 7க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கிய அதே மைதானத்தில் 5.2 என்ற துல்லியமான எக்கனாமியில் 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய பும்ரா ஆட்டநாயக்கன் விருதை வென்றார்.

இந்நிலையில் எப்போதும் வித்தியாசமாக பந்து வீச பயிற்சி எடுப்பது, பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை அலசுவது, ஈகோவை பார்க்காமல் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பந்து வீசுவது ஆகியவை தான் தம்முடைய வெற்றிகரமான பவுலிங்கிற்கு காரணம் என்று பும்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெற்றிக்காக மகிழ்ச்சி. ஆனால் எப்போதும் நான் 5 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை”

- Advertisement -

“இன்று என்னுடைய கேட்ச்கள் ஃபீல்டர்களின் கைக்கு சென்று எனக்கு சாதகமாக அமைந்தது. 20 ஓவர் போட்டிகள் எப்போதும் பவுலர்களுக்கு கடினமானது என்பதால் உங்களுக்கு வித்தியாசமான திறமை வேண்டும். ஒரே ட்ரிக்கை பயன்படுத்த முடியாது. ஏனெனில் அனைவரும் இங்கே டேட்டாவை வைத்து அலசுகின்றனர். பவுலிங் என்பது கடினமாகும். அதில் அடி வாங்கும் நீங்கள் மோசமான நாட்களை சந்திக்கிறீர்கள்”

“அந்த மோசமான நாட்களில் என்னுடைய வீடியோக்களை பார்த்து எது வேலை செய்யவில்லை ஏன் செய்யவில்லை என்று பார்த்து அதற்கு தகுந்தார் போல் அழுத்தத்தில் ரியாக்ட் செய்ய முயற்சிப்பேன். வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிக்கும் போது அழுத்தத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை கண்டறிய வேண்டும். அதையே களத்தில் சந்திக்கும் போது உங்களுக்கு பதில் கிடைக்கும்”

இதையும் படிங்க: 27 பந்து மீதம்.. 17 பந்தில் 50.. சூரியகுமார் அதிரடி சாதனை.. ஆர்சிபி’யை அடித்து நொறுக்கிய மும்பை சாதனை வெற்றி

“பேட்ஸ்மேன்கள் எதில் வலுவாக உள்ளனர் என்பதை நானும் அலசுகிறேன். ஒரே நாளில் உங்களுடைய அனைத்து ட்ரிக்கையும் பயன்படுத்த அவசியமில்லை. டி20 கிரிக்கெட்டில் ஈகோவுக்கு வேலையில்லை. அதனால் உங்களால் 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீச முடியும் என்றாலும் விக்கெட்டை எடுக்க ஸ்லோயர் பந்தை வீச வேண்டுமானால் அதைத் தான் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement