27 பந்து மீதம்.. 17 பந்தில் 50.. சூரியகுமார் அதிரடி சாதனை.. ஆர்சிபி’யை அடித்து நொறுக்கிய மும்பை சாதனை வெற்றி

MI vs RCB 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் பதினொன்றாம் தேதி மும்பையில் இரவு 7.30 மணிக்கு 25வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு தடுமாற்றமாக விளையாடிய விராட் கோலி 3 (9) ரன்களில் பும்ரா வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அப்போது வந்த வில் ஜேக்ஸ் 8 (6) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். இருப்பினும் எதிர்புறம் மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் டு பிளேஸிஸ் அதிரடியாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக வந்து சேர்ந்த ரஜத் படிடார் இந்த சீசனில் முதல் முறையாக அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் 12 ஓவர்கள் வரை நிலைத்து நின்ற இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது ரஜத் படிடார் அரை சதமடித்து 50 (26) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

நொறுக்கிய மும்பை:
ஆனால் அப்போது வந்த கிளன் மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்த சில ஓவரில் மறுபுறம் அசத்திய டு பிளேஸிஸ் அரை சதமடித்து 61 (40) ரன்கள் பும்ரா வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதற்கடுத்ததாக வந்த மஹிபால் லோம்ரர் 0, சௌரவ் சௌஹான் 9 ரன்களில் பும்ரா வேகத்தில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார்கள்.

இருப்பினும் எதிர்ப்புறம் டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி 4 சிக்சருடன் அரை சதமடித்து 53* (23) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் பெங்களூரு 196/6 ரன்கள் எடுத்த நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். அதைத்தொடர்ந்து 197 ரன்களை துரத்திய மும்பைக்கு இஷான் கிசான் – ரோகித் சர்மா ஆகியோர் பவர் பிளே ஓவர்களில் பட்டாசாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

- Advertisement -

அதே வேகத்தில் பட்டைய கிளப்பிய ஜோடி 9 ஓவரில் 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த போது அரை சதமடித்த இசைன் கிசான் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 69 (34) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த சூரியகுமார் யாதவ் தம்முடைய ஸ்டைலில் மைதானத்தின் அனைத்து திசையிலும் அடித்து நொறுக்கிய நிலையில் எதிர்புறம் அசத்திய ரோகித் சர்மா 38 ரன்களில் டாப்லியின் அற்புதமான கேட்ச் ஆல் அவுட்டானார்.

ஆனால் இந்த பக்கம் சரமாரியாக வெளுத்து வாங்கிய சூரியகுமார் 17 பந்தில் 50 ரன்கள் தனது அதிவேகமான ஐபிஎல் அரை சதத்தை அடித்த சாதனையுடன் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 52 (19) ரன்களில் அவுட்டானார். இறுதியில் திலக் வர்மா 16* (10) கேப்டன் பாண்டியா 21* (6) ரன்கள் எடுத்ததால் 15.3 ஓவரிலேயே 199/3 ரன்கள் எடுத்த மும்பை 27 பந்துகள் மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்தது.

இதையும் படிங்க: டு பிளேஸிஸை தூக்கிட்டு அவரை கேப்டனா போடுங்க.. அட்லீஸ்ட் ஆர்பிசி வெற்றிக்கு போராடும்.. ஹர்பஜன் கோரிக்கை

இதன் வாயிலாக பெங்களூரு அணிக்கு எதிராக 190க்கும் மேற்பட்ட இலக்கை அதிவேகமாக சேசிங் செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனை உடைத்து மும்பை மும்பை புதிய சாதனையை படைத்தது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு 15.3 ஓவரில் பெங்களூருக்கு எதிராக மும்பை சேசிங் செய்து வென்றதே முந்தைய சாதனையாகும்.

Advertisement