உண்மையிலே உங்க மனசு தங்கம் சார். விராட் கோலியின் செயலை பாராட்டி ரசிகர்கள் – பகிரும் வீடியோ இதோ

Virat-Kohli
Advertisement

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலாவதாக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையே டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் போட்டியிலும் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மூன்றாம் நாள் ஆட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவினை பகிர்ந்த ரசிகர்கள் விராட் கோலியையும் பாராட்டி வருகின்றனர்.

ஏனெனில் டெல்லி மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் விராட் கோலியை பார்த்து ஆர்.சி.பி, ஆர்.சி.பி என்று குரல் எழுப்பினர். உடனே அதனை கவனித்த விராட் கோலி தனது ஜெர்சியில் உள்ள இந்தியா என்ற பெயரை சுட்டிக்காட்டினார். பிறகு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் இந்தியா இந்தியா என்று குரலில் எழுப்பினர்.

- Advertisement -

இது தொடர்பான இந்த வீடியோ சிறியதாக இருந்தாலும் விராட் கோலியின் தேசப்பற்றினை இந்த செயல் வெளிகாட்டுவதாக கூறி ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவை அதிகளவு சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : IND vs AUS : இந்த தொடரில் 10 போட்டி இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும் – ஹர்பஜன் சிங் விமர்சனம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் அடுத்ததாக மூன்றாவது டெஸ்ட் போட்டியானது மார்ச் ஒன்றாம் தேதி இந்தூர் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement