IND vs AUS : இந்த தொடரில் 10 போட்டி இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும் – ஹர்பஜன் சிங் விமர்சனம்

Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது வரும் மார்ச் 1-ஆம் தேதி இந்தூரில் நடைபெறவுள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 10 போட்டிகளில் விளையாடி இருந்தால் 10 போட்டிகளிலும் இந்தியா தான் வெற்றி பெற்றிருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்த தொடரில் அஸ்வினை சமாளிப்பதற்காகவே அவரைப் போன்ற ஒரு வீரரை தேடிப் பிடித்து அந்த அணி பயிற்சி எடுத்தது. ஆனால் தற்போதைய ஆஸ்திரேலிய அணி ஒரு டூப்ளிகேட் என்று நான் நினைக்கிறேன். எதிர்மறையான விஷயங்களில் மட்டுமே கவனத்தை செலுத்தி ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணியினர் அவர்களது ஆட்டத்தை இழந்துவிட்டனர்.

IND vs AUS Siraj SMith

மைதானம், பந்துவீச்சாளர்கள் என அனைத்தையும் நினைத்து குழப்பம் அடைந்த அவர்கள் போட்டி நடக்கும் முன்னரே தோற்றுவிட்டனர். நிச்சயம் இந்த தொடரில் அவர்கள் விளையாடும் விதத்தை பார்க்கையில் 10 போட்டிகளில் அவர்கள் விளையாடியிருந்தால் பத்திலும் இந்திய அணியிடம் தோற்று இருப்பார்கள் அந்த அளவிற்கு அவர்கள் மனதளவில் சோர்ந்து இருக்கின்றனர் ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்தை பார்த்தால் அவர்கள் போட்டிக்கு தயாராகி வந்திருப்பது போல தெரியவில்லை. விக்கெட்டை எப்படி இழப்பது என்று பயிற்சி எடுப்பது போல தெரிகிறது. இந்த தொடரில் நிச்சயம் இந்திய அணி நான்குக்கு பூஜ்யம் (4-0) என்ற கணக்கில் கைப்பற்றும் என ஹர்பாஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பணத்தை பெற்றுக்கொண்டு ராகுலுக்கு சப்போர்ட் செய்கிறாரா ஆகாஷ் சோப்ரா? ரசிகர்கள் நீட்டும் ஆதாரங்கள் இதோ

இந்த தொடரில் இந்திய அணி பெற்ற இந்த 2 வெற்றிகள் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பினை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. மேலும் ஒரு போட்டியில் இந்திய அணி இந்த தொடரில் வெற்றிபெற்றால் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இந்திய அணியே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement