பணத்தை பெற்றுக்கொண்டு ராகுலுக்கு சப்போர்ட் செய்கிறாரா ஆகாஷ் சோப்ரா? ரசிகர்கள் நீட்டும் ஆதாரங்கள் இதோ

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் கடந்த ஒரு வருடமாகவே சுமாராக செயல்பட்டும் தொடர்ச்சியாக வாய்ப்பு பெற்று வருவது சமீப காலங்களாகவே இந்திய ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்த அவர் நாளடைவில் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதிரடியாக விளையாட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் சுமாராக செயல்பட்டது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டிய அவர் 20, 15, 1 என மீண்டும் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

ஆனாலும் வெளிநாட்டு மண்ணில் சிறந்த தொடக்க வீரராக செயல்பட்டுள்ள ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். முன்னதாக 2014இல் அறிமுகமாகி 8 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி 40க்கும் குறைவான பேட்டிங் சராசரி கொண்டிருந்தும் தொடர்ந்து வாய்ப்பு பெறும் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று ராகுலை நேரடியாக தாக்கிய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் உங்களால் சுப்மன் கில், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

மாமனார் ஆதரவு:
அத்துடன் தவான், ரகானே போன்றவர்கள் வெளிநாட்டில் ராகுலை விட சிறந்த புள்ளிவிவரங்களை கொண்டிருந்தும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த தவறியதால் கழற்றி விடப்பட்டதை ராகுல் டிராவிட்டுக்கு பதிலடியாக கொடுத்தார். அப்படி அவர் ட்விட்டரில் தெரிவித்த விமர்சனங்களில் நியாயமிருந்ததால் எந்த நட்சத்திரங்களும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தாமாக இந்த விவகாரத்தில் உள்ளே நுழைந்தார். குறிப்பாக வெங்கடேஷ் பிரசாத் தவறான புள்ளி விவரங்களுடன் சொந்த விருப்பு வெறுப்புக்காக ராகுலை விமர்சிப்பதாக தனது கையில் ஒரு புள்ளிவிவரத்தை எடுத்துக்கொண்டு தனது யூடியூப் பக்கத்தில் 12 நிமிட வீடியோ போட்ட அவர் பகிரங்கமான பதிலடி கொடுத்தார்.

அதை பார்த்த வெங்கடேஷ் பிரசாத் 2012இல் உண்மையாகவே சொந்த வெறுப்புக்காக ரோகித் சர்மாவை விமர்சித்து ஆகாஷ் சோப்ரா போட்ட ட்வீட்டை தோண்டி எடுத்து உங்களைப் போல் நான் யாரையும் சொந்த வெறுப்புக்காக விமர்சிக்கவில்லை என்று பதிலடி கொடுத்தார். முன்னதாக ராகுல் மீது தமக்கு எந்த பகைமை இல்லை என்று ஏற்கனவே நேற்று முன்தினம் தெளிவுபடுத்திய வெங்கடேஷ் பிரசாத் ஃபார்முக்கு திரும்ப புஜாரா போல ஐபிஎல் தொடரை புறக்கணித்து விட்டு இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட முடியுமா? என்ற கோரிக்கையும் வைத்தார்.

- Advertisement -

மறுபுறம் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே ரோகித் சர்மாவை பற்றிய அந்த 11 வருட பழைய ட்விட்டை ஆகாஷ் சோப்ரா டெலிட் செய்து விட்டார். இதிலிருந்து வெங்கடேஷ் பிரசாத் சொந்த வெறுப்புக்காக விமர்சிக்கவில்லை என்பது உண்மையாகிறது. இந்நிலையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ராகுல் மீது வைக்கப்படும் ஆரோக்கியமான விமர்சனத்திற்கு எதிராக ஆகாஷ் சோப்ரா களமிறங்கியுள்ளதாக சில ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதாவது சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி அவர்களது மகளை ராகுல் திருமணம் செய்து கொண்டதை அனைவரும் அறிவோம். தற்போது ராகுலுக்கு ஆதரவாக வெங்கடேஷ் பிரசாத்துக்கு எதிராக ஆகாஷ் சோப்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்வீட்களை சுனில் செட்டி லைக் செய்துள்ளார். குறிப்பாக தம்மிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆகாஷ் சோப்ரா விமர்சிப்பதை சுனில் செட்டி மறைமுகமாக லைக் செய்வதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

- Advertisement -

அதை கண்டறிந்துள்ள ரசிகர்கள் சமீப காலங்களில் அவர் சுனில் ஷெட்டியை நேரில் சந்தித்து பேசி பேட்டி எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அதை விட 2017இல் மெசேஜ் அனுப்பியுள்ளேன் அதை பாருங்கள் என்று சுனில் செட்டிக்கு ஆகாஷ் சோப்ரா அனுப்பிய ட்வீட்டையும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுப்பி நட்பாக இருக்கும் ட்வீட்டுகளையும் ரசிகர்கள் ஆதாரமாக அடுக்குகிறார்கள்.

இதையும் படிங்க: IND vs AUS : இந்தியாவை தோற்கடிக்க அந்த உதவியை செய்ய நான் தயார் – ஆஸ்திரேலிய அணிக்கு மேத்தியூ ஹைடன் அழைப்பு

முன்னதாக தனது மகள் திருமணம் செய்து கொண்டதற்காக ராகுலுக்கு 10+ கோடி மதிப்புள்ள பங்களாவை சீதனமாக பரிசளித்த சுனில் செட்டி இந்த விமர்சனங்களை நிறுத்துவதற்காக ஆகாஷ் சோப்ராவுக்கு ஏன் பணம் கொடுத்திருக்க மாட்டார் என்றும் ரசிகர்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

Advertisement