IND vs AUS : இந்தியாவை தோற்கடிக்க அந்த உதவியை செய்ய நான் தயார் – ஆஸ்திரேலிய அணிக்கு மேத்தியூ ஹைடன் அழைப்பு

Hayden
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது. குறிப்பாக கடைசியாக கடந்த 2014/15 ஆம் ஆண்டு இத்தொடரை வென்றிருந்த அந்த அணி அதன் பின் 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய அடுத்தடுத்த 4 தொடர்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் இந்த தொடர் தோல்விகளால் 2004க்குப்பின் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்கிய அந்த அணியின் கனவு மீண்டும் கனவாகவே போயயுள்ளது.

- Advertisement -

அத்துடன் அடுத்த 2 போட்டிகளில் வென்று குறைந்தபட்சம் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் பிட்ச் பற்றி கடுமையாக விமர்சித்த அளவுக்கு செயலில் செயல்படாதது அந்நாட்டவர்களையே கடுப்பாக வைத்துள்ளது. ஏனெனில் நம்பர் ஒன் அணி என்பதற்கு அடையாளமாக செயல்படாமல் முதல் போட்டியின் 3வது நாள் உணவு இடைவெளியில் களமிறங்கி தேநீர் இடைவெளிக்கு முன் 91 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா 2வது போட்டியிலும் கொஞ்சமும் முன்னேறாமல் அதே 3வது நாளில் 2 மணி நேரத்திற்குள் 114 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

கோச்சிங் செய்ய தயார்:
அதை விட சுழலாமல் நேராக வரும் பந்துகளை கூட திறம்பட எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் திணறும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் ஷாட் அடித்து தங்களது விக்கெட்டுகளை கோட்டை விட்டது நிறைய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களை கோபமடைய வைத்துள்ளது. அப்படி தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் தடுமாறும் ஆஸ்திரேலியா நிச்சயம் இத்தொடரில் ஒயிட் வாஷ் தோல்வியை சந்திப்பது உறுதி என்று சில கருத்துக்கள் காணப்படுகின்றன.

Ravichandran Ashwin Steve Smith

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் தற்போதைய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மேக்னோலாட் சுமாராக செயல்படுவதாக விமர்சிக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் மேத்தியூ ஹைடன் இத்தொடரில் தோல்வியிலிருந்து மீண்டெழுந்து வெற்றி பாதைக்கு திரும்ப எந்த நேரத்திலும் பயிற்சி கொடுப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இது பற்றி சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“100% ஒரு நாளின் எந்த நேரத்திலும் அது பகலாக இருந்தாலும் இரவாக இருந்தாலும் நான் தயாராக இருக்கிறேன். தற்சமயத்தில் நீங்கள் எந்த நேரத்திலும் ஆஸ்திரேலியாவுக்காக என்னிடம் ஏதாவது செய்யுமாறு கேட்டுக் கொண்டால் நிச்சயமாக அந்த நாளின் எந்த நேரமாக இருந்தாலும் நான் அதற்கு ஆம் என்று சொல்வேன். மேலும் பிக்பேஷ் தொடரால் இத்தொடருக்கு முன்பாக நாம் பயிற்சி போட்டியில் விளையாட முடியாத அசாத்தியமான சூழ்நிலையை சந்தித்தோம்”

Hayden

“இங்கே வந்த பின்பும் சில முக்கிய சூப்பர் ஸ்டார் வீரர்கள் தங்களது அணிக்காக விளையாடவில்லை என்று நாம் விமர்சித்துக் கொண்டிருந்தோம். அப்போதும் நம்மிடம் 9 நாட்கள் எஞ்சி இருந்தது. அந்த இடத்தில் தான் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் அவர்களுடைய கதாபாத்திரம் எனக்கு பொறாமையை ஏற்படுத்தவில்லை. ஐபிஎல் காரணமாக 2 மாத காலப்பகுதியில் 0% கட்டுப்பாட்டைக் கொண்ட அவரது விளையாடும் அணியின் அடிப்படையில் முன்னுரிமை என்ன என்பதை அவர் ஆராய வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: சொந்த வெறுப்பால் ரோஹித்தை கலாய்த்த நீங்க பேசலாமா? 11 வருட பழைய ட்வீட்டை தோண்டிய பிரசாத் – சோப்ராவுக்கு மாஸ் பதிலடி

மொத்தத்தில் ஆரம்பத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்கள் அமைக்கப்பட்டிருந்ததாக விமர்சித்த ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் தற்போது தங்களது அணி வீரர்கள் சுமாராக செயல்பட்டதை பார்த்து பிட்ச் மீது எந்த தவறுமில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தங்களது வீரர்களுக்கு தெரியாததால் அதை கற்றுக் கொடுக்க தயாராக இருப்பதாக மேத்யூ ஹைடன் வெளிப்படையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement