விராட் ரோஹித்துக்கு இந்திய அணி அப்படி செஞ்சா.. அதை விட பைத்தியக்காரத்தனம் இருக்க முடியாது.. ரசல் எச்சரிக்கை

- Advertisement -

ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் தொடருக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அங்கு 3 ஒருநாள் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதில் டெஸ்ட் தொடரில் மட்டும் தேர்வாகியுள்ள ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் தேர்வு செய்யப்படாதது நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

குறிப்பாக டி20 தொடரில் தேர்வு செய்யப்படாததால் அவர்களுக்கு 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகமும் காணப்படுகிறது. ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு சீனியர் வீரர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர். அதன் காரணமாக அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறக்கும் வேலையை பிசிசி துவங்கியுள்ளது.

- Advertisement -

ரசல் எதிர்ப்பு:
சொல்லப்போனால் அதன் காரணமாக பணிச்சுமை என்ற பெயரில் கடந்த 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் இதுவரை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக மேற்கொண்டு ஒரு டி20 போட்டியில் கூட விளையாடாமல் இருந்து வருகிறார்கள். ஆனாலும் 2023 உலகக் கோப்பையில் அந்த இருவருமே அபாரமாக விளையாடி வெற்றிக்கு போராடியதால் கண்டிப்பாக அடுத்த 6 மாதத்தில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையிலும் விளையாட வேண்டும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலைமையில் தங்களுடைய சொந்த ஊரில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகியோரை தேர்வு செய்யவில்லை என்றால் அது இந்திய அணி செய்யப்போகும் பைத்தியக்காரத்தனமான முடிவாக இருக்கும் என ஆண்ட்ரே ரசல் விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் விராட் மற்றும் ரோஹித் பற்றி ஏன் இந்த விவாதம் இவ்வளவு பெரியதாக பேசப்படுகிறது என்பது எனக்கு தெரியவில்லை”

- Advertisement -

“இப்போதுள்ள சமூக வலைதளங்கள் வீரர்களின் திறமையை கேள்வி கேட்கும் இடமாக இருக்கிறது. ரோஹித் சர்மா கொண்டுள்ள அனுபவத்திற்கும் விராட் தொடர்ந்து விராட் கோலியாக செயல்பட்டு வருவதற்கும் அவர்களை உலகக் கோப்பையில் இந்தியா தேர்வு செய்யாமல் போனால் அது பைத்தியக்காரத்தனமாக இருக்கும்”

இதையும் படிங்க: அப்பாடா ஒரு வழியா இப்போவாது அவருக்கு சேன்ஸ் குடுத்தீங்களே.. ரொம்ப சந்தோசம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

“உலகக் கோப்பையில் உங்களுக்கு எப்போதுமே அனுபவம் தேவை. அங்கே நீங்கள் 11 படை வீரர்களை அனுப்ப முடியாது. மாறாக அனுபவம் மிக்கவர்களை அனுப்ப வேண்டும். அதே சமயம் இளம் வீரர்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அழுத்தமான பெரிய தருணங்களில் அசத்துவதற்கு உங்களுக்கு பெரிய வீரர்கள் தேவை” என்று கூறினார்.

Advertisement