அப்பாடா ஒரு வழியா இப்போவாது அவருக்கு சேன்ஸ் குடுத்தீங்களே.. ரொம்ப சந்தோசம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

Sanju-Samson
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது உலக கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கு அடுத்து இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள மூன்று வகையான தொடர்களிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றனர். இந்த தொடரானது டிசம்பர் 10-ஆம் தேதி முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட வேளையில் அந்த இந்திய ஒருநாள் தொடருக்கான அணியில் கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் திறமையான வீரராக பார்க்கப்படும் சஞ்சு சாம்சனுக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த வேளையில் சமீபகாலமாகவே அவர் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் இடம் பெறாமல் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளதால் நிச்சயம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : சுப்மன் கில் சூப்பர் பிளேயர் தான்.. இருந்தாலும் குஜராத் அணியின் கேப்டனா அவரை போட்டு இருக்கலாம் – ஏ.பி.டி கருத்து

அதன் காரணமாக தற்போது சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் திறமையான வீரரான அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அப்படி அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் நிச்சயம் அவர் அந்த இடத்தை தனது சிறப்பான செயல்பாடுகளின் மூலம் அவர் உறுதி செய்வார் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement