சுப்மன் கில் சூப்பர் பிளேயர் தான்.. இருந்தாலும் குஜராத் அணியின் கேப்டனா அவரை போட்டு இருக்கலாம் – ஏ.பி.டி கருத்து

ABD
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் 17-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கு முன்பாக வீரர்களுக்கான மினி ஏலமானது டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக சில வீரர்கள் டிரேடிங் முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்டிக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்காக சென்றுள்ளார்.

அதனால் அந்த இடத்தை நிரப்பும் வகையில் புதிய கேப்டனாக குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லை புதிய கேப்டனாக அந்த அணியின் நிர்வாகம் நியமித்துள்ளது. அனுபவ வீரர்கள் சிலர் அந்த அணியில் இருந்தாலும் இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு அந்த அணியின் நிர்வாகம் கேப்டன் பொறுப்பை வழங்கி உள்ளது அனைவரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஆனாலும் இந்திய அணியின் வருங்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படும் சுப்மன் கில்லுக்கு இந்த வாய்ப்பினை வழங்கியது சரிதான் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுப்மன் கில்லை விட குஜராத் அணியில் உள்ள சீனியர் வீரர் ஒருவருக்கு கேப்டன் பதவியை வழங்கி இருக்கலாம் என்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

சுப்மன் கில் ஒரு திறமையான வீரர் தான். அதேபோன்று அவர் கேப்டன் பதவிக்கும் தகுதியானவர் தான் இருந்தாலும் குஜராத் அணியில் அனுபவம் வாய்ந்த வீரரான கேன் வில்லியம்சன்க்கு கேப்டன் பதவியினை வழங்கி இருந்தால் அது சரியான முடிவாக இருந்திருக்கும். ஏனெனில் அவரது அனுபவத்தை அடுத்த வருடம் அருகில் நின்று பார்த்து சில விடயங்களை சுப்மன் கில் கற்றுக் கொண்டிருந்தால் 2025-இல் அவரை கேப்டனாக நியமித்திருக்கலாம்.

இதையும் படிங்க : இன்றைய 4 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

இருந்தாலும் தற்போதே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில்லின் செயல்பாட்டை காண ஆர்வமாக காத்திருப்பதாக ஏபிடிவில்லியர்ஸ் கூறியுள்ளார். குஜராத் அணியில் கேன் வில்லியம்சன், ரஷித் கான், டேவிட் மில்லர் ஆகிய சீனியர் வீரர்கள் இருந்தும் இவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement