இன்றைய 4 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

IND-vs-AUS
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்று கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து நான்காவது டி20 போட்டியானது இன்று டிசம்பர் 1-ஆம் தேதி ராய்ப்பூர் நகரில் நடைபெற இருக்கிறது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத வேளையில் நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் நிகழும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் முதல் மூன்று போட்டிகளில் இடம் பெறாத ஷ்ரேயாஸ் ஐயர் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிக்கான இந்திய அணியில் இணைந்துள்ளதால் அவர் நேரடியாக பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

அவரது வருகையால் திலக் வர்மா வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. அதனை தவிர்த்து இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. இந்தப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலிய அணியும் இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

- Advertisement -

மேலும் ஷ்ரேயாஸ் ஐயரை தவிர்த்து வேறெந்த மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது. அதன்படி இன்றைய நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அவர் இந்திய அணிக்குள் வந்துட்டாரு.. கண்டிப்பா ஆஸியை வீழ்த்துவோம்.. ரவி பிஷ்னோய் நம்பிக்கை

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) ரிங்கு சிங், 7) அக்சர் படேல், 8) ரவி பிஷ்னாய், 9) அர்ஷ்தீப் சிங், 10) பிரசித் கிருஷ்ணா, 11) ஆவேஷ் கான்.

Advertisement