அந்த வெளிநாட்டு தொடரை ஜெயிக்க ரோஹித், கோலி கண்டிப்பா வேணும்.. இர்பான் பதான் அதிரடி

Irfan Pathan 3
- Advertisement -

சொந்த மண்ணில் நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஏமாற்றமான தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தை துவங்கியுள்ளது. அதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இந்தியா அடுத்ததாக தென்னாப்பிரிக்காவில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்க தயாராக உள்ளது.

ஆனால் இந்த 2 தொடர்களிலும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெறாதது நிறைய குழப்பங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

அனுபவம் தேவை:
அதனால் 2024 டி20 உலகக் கோப்பையில் அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை களமிறக்கும் வேலையை பிசிசிஐ செய்து வருகிறது. இருப்பினும் 2023 உலகக் கோப்பையில் விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் தான் இளம் வீரர்களை விட மிகச் சிறப்பாக விளையாடிய அதிக ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார்கள்.

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உள்ள மைதானங்கள் பேட்டிங்க்கு சவாலாக இருக்கும் என்பதால் அதில் சாதிப்பதற்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவமிக்கவர்கள் தேவை என இர்பான் பதான் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் மீண்டும் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். காரணம் என்னவெனில் நாம் உலகக் கோப்பையில் விளையாடுகிறோம்”

- Advertisement -

“அந்த உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறுகிறது. அங்குள்ள பிட்ச் தற்போது மாறியுள்ளது. ஐசிசி தொடர்களில் அது நன்றாக இருக்கலாம். இருப்பினும் பேட்டிங்க்கு சாதகமான சூழ்நிலைகள் அங்கு இருக்கும் என்று சொல்ல முடியாது. எடுத்துக்காட்டாக அங்கு நடைபெற்ற சமீபத்திய கரீபியன் பிரிமியர் லீக் மற்றும் உள்ளூர் தொடர்களில் பேட்ஸ்மேன்கள் குவிப்பதற்கு கடினமான வேலைகளை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அது போன்ற சூழ்நிலைகளில் சாதிக்க உங்களுக்கு அனுபவம் தேவை. 2023 உலகக் கோப்பையில் ஒரு போட்டியை தவிர்த்து நாம் அனைத்திலும் வென்றதால் பெரிய அளவில் மாற்றங்கள் தேவையில்லை”

இதையும் படிங்க: பாபர் அசாம் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் கண் கலங்கியபடி நின்றார் – குர்பாஸ் கூறிய தகவல்

“இங்கே நிறைய பேர் டி20 கிரிக்கெட்டில் புதுமையான அணுகுமுறை தேவை என்று பேசுகின்றனர். ஆனால் தற்சமயத்தில் ரோஹித் சர்மா தான் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக இருக்கிறார். அவர் கடந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் அணுகுமுறையை மாற்றி தன்னுடைய தோள் மீது அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றார். அவர் கேப்டனாக தொடர வேண்டும். விராட் கோலியின் அனுபவத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

Advertisement