பாபர் அசாம் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் கண் கலங்கியபடி நின்றார் – குர்பாஸ் கூறிய தகவல்

Gurbaz-and-Babar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்து வெளியேறியது. சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் அணியின் இந்த செயல்பாடு அனைவருக்கும் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றது.

அதோடு ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் முன்னாள் சாம்பியன்களான இலங்கை, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற பலமான அணிகளை வீழ்த்தியதை அடுத்து அவர்களுக்கு பெரிய அளவில் பாராட்டுகளும் கிடைத்தன. அதேவேளையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான அணி 4 வெற்றிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்து வெளியேறியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றுப்போட்டியின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் சேசிங்கை வெற்றிகரமாக நிறைவு செய்து முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியிருந்தது.

அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 53 பந்துகளில் 65 ரன்கள் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். இந்நிலையில் அந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் நடைபெற்ற சில சுவாரசியமான சம்பவங்களை தற்போது அவர் பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

பொதுவெளியில் இதை பேசலாமா என்று தெரியவில்லை. நாங்கள் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய பின்னர் பாபர் அசாம் கண்ணீர் விடும் தருவாயில் இருந்தார். அதோடு அழுதுவிடக்கூடாது என்பதிலும் அவர் தீவிரமாக இருந்தார். இப்படி பாபர் அசாம் போன்ற ஒரு வீரர் மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்து நான் பார்த்ததே கிடையாது. இருந்தாலும் அவர் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருந்தார்.

இதையும் படிங்க : தோனி கடவுளின் பரிசு.. 20 கிலோ குறைஞ்சா எடுத்துக்குறேன்ன்னு சொன்னாரு.. 2018 பின்னணியை பகிர்ந்த ஆப்கன் வீரர்

அந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது. பின்னர் போட்டிக்கு பிறகு நான் அவரிடம் பரிசாக அவருடைய ஒரு பேட்டை கேட்டேன். அதன்பிறகு அவரும் எனக்காக ஒரு பேட்டை கொண்டு பரிசளித்தார். என்னை பொறுத்தவரை கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர் மற்றும் கேப்டன்களில் அவரும் ஒருவர் என குர்பாஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement