என்னதான் இருந்தாலும் விராட் கோலியும், ராகுலும் செய்ஞ்சது தப்பு தான். நடந்தது என்ன? – விவரம் இதோ

Kohli-and-Rahul
- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நேற்று புனே நகரில் நடைபெற்ற நடப்பு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 17-ஆவது லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய வங்காதேச அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பாக அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்திய அணி சார்பாக பும்ரா, சிராஜ் ,ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

- Advertisement -

பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட இந்திய அணியானது 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 261 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் விராட் கோலி 97 பந்துகளை சந்தித்து 103 ரன்களையும், கேல் ராகுல் 34 பந்துகளில் 34 ரன்களையும் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியின் இறுதி நேரத்தில் விளையாடிய விராட் கோலி தான் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக அணியின் வெற்றியை தாமதப்படுத்தி தொடர்ச்சியாக இரண்டு ஓவர்கள் அவரே பந்துகளை சந்தித்து விளையாடினார். அதே போன்று விராட் கோலி பவுண்டரி லைன் வரை பந்தை அடித்தாலும் கே.எல் ராகுல் சிங்கிள் ஓடாமல் அவர் சதம் அடிப்பதற்காக உதவினார்.

- Advertisement -

இப்படி விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்று கே.எல் ராகுல் உதவியதோடு மட்டுமின்றி அம்பயரும் விராட் கோலிக்கு கொடுக்கப்பட வேண்டிய வொயிடு ஒன்றினை கொடுக்காமல் விட்டார். இப்படி கோலி சதம் அடிப்பதற்காக களத்தில் இருந்த வீரர் மற்றும் அம்பயர் என இருதரப்பும் உதவியது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில் இருதரப்பு தொடர் என்றால் நாம் வெற்றிக்கு அருகில் இருக்கும் போது ஒரு வீரர் சதத்தை நோக்கி செல்லும் போது இவ்வாறு விட்டுக் கொடுக்கலாம். ஆனால் உலக கோப்பை போன்ற தொடர்களில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்பதால் ரன் ரேட் மிக அவசியமானது.

இதையும் படிங்க : ஜெயவர்தனேவை முந்தி தோனி, சச்சின், கெயில் ஆகியோரின் சாதனைகளை உடைத்த கிங் கோலி.. 2 புதிய உலக சாதனை

எனவே போட்டியில் எவ்வளவு விரைவாக முடித்திருக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரமாக முடித்திருக்க வேண்டும். அதை விடுத்து இப்படி கோலி சதம் அடிக்கும் வேண்டும் என்பதற்காகவே சற்று பொறுமையாக சென்று இந்த இன்னிங்ஸ் முடிக்கப்பட்டதாக ரசிகர்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் உலககோப்பை போட்டியில் இவ்வாறு சுயநலமாக நடந்து கொண்டது தவறு என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement