ஒரே போட்டியில் ஜோடியாக மோசமான சாதனையில் இணைந்த விராட் கோலி மற்றும் ஜோ ரூட் – இதுதான் முதல் முறையாம்

Root-and-Kohli
- Advertisement -

ரசிகர்களின் பெரிய வரவேற்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது அரையிறுதி சுற்றுக்கான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 28 லீக் போட்டிகளுக்கு பிறகு தற்போது 29-ஆவது லீக் போட்டியானது இன்று லக்னோ மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி அக்டோபர் 29-ஆம் தேதி இன்று துவங்கிய இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது.

- Advertisement -

இவ்வேளையில் இன்று துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை குவிக்க தற்போது 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலியும், இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜோ ரூட்டும் ஒரே போட்டியில் மோசமான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தில் ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி சார்பாக 3 ஆவது வீரராக களமிறங்கிய விராட் கோலி 9 பந்துகளை சந்தித்த வேளையில் ரன்கள் ஏதும் குவிக்காமல் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக விராட் கோலி டக் அவுட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மதியம் கிங் கோலியை கலாய்த்த இங்கிலாந்து ரசிகர்கள்.. மாலையில் மாஸ் பதிலடி கொடுத்த இந்தியா

பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வரும் வேளையில் இங்கிலாந்து அணியிலும் மூன்றாவது வீரராக களமிறங்கிய ஜோ ரூட் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அவரும் உலகக்கோப்பை போட்டிகளில் முதல் முறையாக டக் அவுட்டாகி மோசமான நிலையை சந்தித்துள்ளார். இப்படி விராட் கோலி மற்றும் ஜோ ரூட் என இருவருமே ஒரே நாளில் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement