மதியம் கிங் கோலியை கலாய்த்த இங்கிலாந்து ரசிகர்கள்.. மாலையில் மாஸ் பதிலடி கொடுத்த இந்தியா

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 29ஆம் தேதி லக்னோ நகரில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின. மதியம் 2:00 மணிக்கு நடைபெற்ற அந்தப் போட்டியில் ஏற்கனவே 4 தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் சுப்மன் கில் 9, விராட் கோலி 0, ஸ்ரேயாஸ் ஐயர் 4 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்பரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அந்த நிலைமையில் நிதானமாக விளையாட முயற்சித்த கேஎல் ராகுலும் போராடி 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்தியா பதிலடி:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடி இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது ஜடேஜாவும் 8 ரன்னில் அவுட்டானதால் 200 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு சூரியகுமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ரன்கள் எடுத்தார்.

அதனால் 50 ஓவர்களில் இந்தியா போராடி 229/9 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 230 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு டேவிட் மாலனை 16 ரன்களில் போல்டாக்கிய பும்ரா அடுத்ததாக வந்த நட்சத்திர வீரர் ஜோ ரூட்டையும் கோல்டன் டக் அவுட்டாக்கினார். குறிப்பாக இதே போட்டியில் 9 பந்துகளில் 0 ரன்களில் அவுட்டான விராட் கோலி உலகக்கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தார்.

- Advertisement -

அப்போது இங்கிலாந்து ரசிகர்களின் அதிகாரப்பூர்வ பக்கமான “பார்மி ஆர்மி” குளத்தில் மீண்டும் வாத்தின் தலையை அகற்றி விட்டு விராட் கோலியின் தலையை வைத்து டிவிட்டடில் தாறுமாறாக கிண்டலடித்தது. அதனால் கடுப்பான இந்திய ரசிகர்கள் தற்போது அதே புகைப்படத்தில் விராட் கோலிக்கு பதிலாக ஜோ ரூட் தலையை வைத்து குளத்தில் வாத்து நீந்துவது போன்ற படத்தை பதிவிட்டு இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: லக்னோ நகரில் நடைபெற்று வரும் போட்டியில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள் – காரணம் என்ன?

அந்த நிலையில் அடுத்ததாக வந்த பென் ஸ்டோக்ஸை டக் அவுட்டாக்கிய முகமது ஷமி மறுபுறம் சவாலை கொடுக்க முயற்சித்த ஜானி பேர்ஸ்டோவையும் 14 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கி தெறிக்க விட்டார். அதன் காரணமாக 40/4 என்ற என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற இங்கிலாந்தை இதே வேகத்தில் சிறப்பாக பந்து வீசி தோற்கடிக்கும் முனைப்புடன் இந்திய பவுலர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

Advertisement