லக்னோ நகரில் நடைபெற்று வரும் போட்டியில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள் – காரணம் என்ன?

IND-vs-ENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 29-வது மிக முக்கிய லீக் போட்டியானது அக்டோபர் 29-ஆம் தேதியான இன்று லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்த்து அதிரடியாக விளையாட தடுமாறியது. அதிலும் குறிப்பாக துவக்கத்திலேயே அடுத்தாதது விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி பெரிய பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் தடுமாறியது.

- Advertisement -

இருப்பினும் எப்படியோ சுதாரித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 87 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 49 ரன்களையும் குவித்து அசித்தனர்.

பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருவது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

மேலும் இப்படி திடீரென இந்திய அணியின் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாட காரணம் என்ன? என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் அதற்கான விளக்கத்தை நாங்கள் உங்களுக்கு உங்களுக்காக தெளிவாக வழங்கியுள்ளோம். அதன்படி கடந்து சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரரான பிஷன் சிங் பேபி என்பவர் மறைந்தார்.

இதையும் படிங்க : கைகொடுத்த ரோஹித், சூரியகுமார்.. இங்கிலாந்திடம் அடங்க மறுத்த இந்தியா.. ட்ரிக்கான பிட்ச்சில் சாதிக்குமா

அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும், அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இப்படி கையில் கருப்பு பட்டை அணிந்து இந்திய அணி விளையாடி வருவதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும்போது அந்த அணியில் முக்கிய வீரராக பிஷன் சிங் பேடி இருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement