கைகொடுத்த ரோஹித், சூரியகுமார்.. இங்கிலாந்திடம் அடங்க மறுத்த இந்தியா.. ட்ரிக்கான பிட்ச்சில் சாதிக்குமா

IND vs ENG
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 29ஆம் தேதி லக்னோ நகரில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின. அதில் 5 தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற இந்தியாவுக்கு எதிராக 4 தோல்விகளை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ள இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா வழக்கம் போல நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய போதிலும் சுப்மன் கில் 9 ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

அதனால் 40/3 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா அரை சதம் கடந்தார். அவருடன் அடுத்ததாக களமிறங்கி ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் தம்முடைய பங்கிற்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் 39 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அடுத்த சில ஓவர்களிலேயே சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா 10 பவுண்டரி 3 சிக்சருடன் 87 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அப்போது வந்த சூரியகுமார் யாதவ் நிதானமாக விளையாடிய போதிலும் ரவீந்திர ஜடேஜா 8 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதால் இந்தியா 200 ரன்கள் தாண்டுமா என்ற கவலை ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நிதானமாக விளையாடிய சூரியகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 200 ரன்கள் தாண்ட உதவிய போது அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 (47) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் சென்றார். இறுதியில் பும்ரா போராடி 16, குல்தீப் யாதவ் 9* ரன்கள் எடுத்த போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 229/9 ரன்கள் மட்டுமே இருந்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் கட்டுக்கோப்பாக செயல்பட்ட இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3, கிறிஸ் ஓக்ஸ் மற்றும் அடில் ரசித் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இதையும் படிங்க: சரிந்த இந்தியாவை தாங்கி பிடித்த ஹிட்மேன் ரோஹித்.. சச்சின், கங்குலி வரிசையில் அபார சாதனை

ஆனாலும் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து சிறப்பாக பந்து வீசியதால் அவுட்டாகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா அடங்க மறுத்து போராடினால் வெற்றி பெறக்கூடிய ஸ்கோரை எடுத்துள்ளது என்றே சொல்லலாம். மேலும் லக்னோ மைதானம் பவுலிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தி இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு போராடி வருகின்றனர்.

Advertisement