சரிந்த இந்தியாவை தாங்கி பிடித்த ஹிட்மேன் ரோஹித்.. சச்சின், கங்குலி வரிசையில் அபார சாதனை

Rohit Sharma 18000
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 29ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதின. அதில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று சொந்த மண்ணில் வலுவாக இருக்கும் இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே 4 தோல்விகளை பதிவு செய்து செமி ஃபைனல் 90% நழுவ விட்ட இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் 9 ரன்களில் கிளீன் போல்ட்டானார். அப்போது வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்னில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அதனால் 40/3 என ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்த இந்தியாவுக்கு அடுத்ததாக வந்த கேஎல் ராகுல் நிதானமாக விளையாடி கேப்டன் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் 39 (58) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா அரை சதம் கடந்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்தார்.

நேரம் செல்ல செல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 87 (101) ரன்கள் எடுத்திருந்த போது அடில் ரசித் சுழலில் சிக்கி அவுட்டானது ரசிகர்களுக்கு மற்றுமொரு ஏமாற்றமாக அமைந்தது. ஆனாலும் இந்த உலகக் கோப்பையில் ஏற்கனவே சதமடித்த நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் இந்த போட்டியிலும் இந்தியா சரிந்த போது நங்கூரமாக விளையாடி ஓரளவு காப்பாற்றினார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

அத்துடன் இந்த 87 ரன்களையும் சேர்த்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து 18000 ரன்களை குவித்த 5வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்த ரோகித் சர்மா ஜாம்பவான்கள் சச்சின், டிராவிட் ஆகியோர் இருக்கும் பட்டியலில் இணைந்தார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 34357
2. விராட் கோலி : 26121
3. ராகுல் டிராவிட் : 24064
4. சௌரவ் கங்குலி : 18433
5. ரோஹித் சர்மா : 18040
6. எம்எஸ் தோனி : 17092

அது போக சர்வதேச கிரிக்கெட்டில் 2023 காலண்டர் வருடத்தில் 1000 ரன்கள் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். இந்த நிலைமையில் வந்த ரவீந்திர ஜடேஜாவும் 8 ரன்னில் அவுட்டானதால் சூரியகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் தம்முடைய தரத்தை காண்பிக்கும் விளையாடும் நிலையில் சற்று முன் 41 ஓவர்களில் இந்தியா 182/6 ரன்கள் எடுத்து போராடி வருகிறது.

Advertisement