2013 போல மீண்டும் களத்தில் கோபமாக சண்டை போட்டுக்கொண்ட விராட் கோலி – கம்பீர், நடந்தது என்ன

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 1ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 43வது லீக் போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. லக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் போராடி 126/9 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளேஸிஸ் 44 (40) ரன்களும் விராட் கோலி 31 (30) ரன்களும் எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை துரத்திய லக்னோவுக்கு கெய்ல் மேயர்ஸ் 0, மார்கஸ் ஸ்டோனிஸ் 13, நிக்கோலஸ் பூரன் 13 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்ப முதலே சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் கேஎல் ராகுல் காயத்தால் கடைசியில் களமிறங்கியும் வெற்றி பெற வைக்க முடியவில்லை. அதனால் 19.5 ஓவரில் 108 ரன்களுக்கு லக்னோவை சுருட்டி அபார வெற்றி பெற்ற பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் மற்றும் சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

அதிரடி சண்டை:
அதை விட அந்தப் போட்டியில் 17வது ஓவரில் பவுண்டரி அடித்த இளம் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக்கை ஒரு பந்தில் வெள்ளை கோட்டுக்கு உள்ளே வந்தும் முகமது சிராஜ் கோபமாக ரன் அவுட் செய்ய முயற்சித்தார். அதனால் அந்த சமயத்தில் சாதாரணமாகவே ஆக்ரோசத்தை வெளிப்படுத்தக்கூடிய விராட் கோலி மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமித் மிஸ்ரா மற்றும் நடுவர் ஆகியோர் உள்ளே புகுந்து தடுக்க முயற்சி நிலையில் விராட் கோலி தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களை ஆக்ரோசமாக தெரிவித்தார்.

அதிலிருந்தே இரு தரப்புக்குமிடையே சண்டை முற்றிய நிலையில் போட்டி முடிந்ததும் வழக்கம் போல இரு அணி வீரர்களும் கை கொடுத்துக் கொண்ட போது நவீனிடம் மீண்டும் வம்பிழுத்த விராட் கோலியை அருகிலிருந்த கிளன் மேக்ஸ்வெல் தடுத்து நிறுத்தினார். ஆனால் இவை அனைத்தையும் ஃபெவிலியனில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தால் லக்னோ அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் தனது அணி வீரரிடம் வம்பிழுத்த விராட் கோலிக்கு போட்டி முடிந்ததும் கை கொடுக்க வந்த போது தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

ஏற்கனவே 2013இல் கொல்கத்தா அணிக்காக விளையாடிய அவர் இதே போல விராட் கோலியுடன் சண்டையில் ஈடுபட்டது யாராலும் மறக்க முடியாது. அப்போதிலிருந்தே இருவரும் மோதி வரும் நிலையில் ஓய்வுக்கு பின் விராட் கோலியை சம்பந்தமின்றி விமர்சிப்பதை கௌதம் கம்பீர் வழக்கமாக வைத்துள்ளதை அறிவோம். அந்த நிலையில் 10 வருடங்கள் கழித்து இந்த போட்டியில் தம்முடைய அணி வீரரிடம் வம்பிழுத்த விராட் கோலிக்கு கொஞ்சமும் பின்வாங்காமல் கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்ததால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

குறிப்பாக விராட் கோலியுடன் பேசிய வாக்கில் நடந்து வந்த கெய்ல் மேயர்ஸை தடுத்து கௌதம் கம்பீர் அப்புறப்படுத்தினார். ஆனால் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாத அவர் விராட் கோலியுடன் நெஞ்சோடு நெஞ்சாக மோதுவதற்கு சென்ற போது ஆவேஷ் கான், கேஎல் ராகுல் ஆகியோர் தடுத்து நிறுத்தினார்கள். அதற்கு விராட் கோலி பதிலடி கொடுக்க வந்த போது இரு அணி வீரர்களும் இருவரையும் தடுத்து நிறுத்தினர். அதனால் போட்டியை விட போட்டி முடிந்த பின் இரு அணிகளை சேர்ந்தவர்கள் இப்படி மோதிக்கொண்டது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க:வீடியோ : விராட் கோலியுடன் சண்டை, ராகுல் சமாதானத்தை தாண்டி கை கொடுக்க மறுத்த ஆப்கானிஸ்தான் வீரர் – காரணம் இதோ

அதை விட போட்டி முடிந்ததையும் விராட் கோலியை சமாதானம் செய்த லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் அந்த வழியாக சென்ற நவீனை பேசுமாறு அழைத்தார். அதே சமயம் விராட் கோலியும் பகையை மறந்து கை கொடுக்க தயாராக நின்ற போது பேசுவதற்கு எதுவுமில்லை என்று தலையசைத்த நவீன் அங்கிருந்து சென்றது இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement