தென்னாப்பிரிக்கா செல்லும் முன் வினோத் காம்பிளியிடம் பயிற்சியெடுத்த 2 வீரர்கள் – எதற்கு இந்த பிராக்டீஸ்?

Kambli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எதிர்வரும் 26ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது. விராட் கோலியின் தலைமையின் கீழ் 18 பேர் இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்தனர். இந்த இந்திய அணியானது கடந்த 16ஆம் தேதிக்கு முன்னர் மூன்று நாட்கள் மும்பையில் உள்ள தனியார் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர் தனி விமானம் மூலம் கடந்த 16 ஆம் தேதி இந்திய அணி வீரர்கள் தென்ஆப்பிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இந்த தொடருக்கு தேர்வாகி இருந்த இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரஹானே மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பயோ பபுளுக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளியின் கிரிக்கெட் அகாடெமிக்கு சென்று அவரிடம் சிறிது பயிற்சியை எடுத்துக் கொண்டுள்ளனர்.

- Advertisement -

இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டியில் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வினோத் காம்ப்ளி தனது அனுபவத்தை ரிஷப் பண்ட் மற்றும் ரஹானேவிடம் பகிர்ந்து கொண்டதாகவும் எதிர்வரும் தென் ஆப்ரிக்க தொடரில் அந்த நாட்டு மைதானத்தில் எவ்வாறு விளையாட வேண்டும் என்று தனக்கு தெரிந்த நுணுக்கங்களையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்ததாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் பகிர்ந்த இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இந்த டெஸ்ட் தொடரில் தனது திறமையை நிரூபிக்கவில்லை என்றால் இந்திய அணியில் இருந்தே வெளியேறும் ஆபத்து ரஹானேவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது துணைக்கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது இக்கட்டான கட்டத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : Breaking News : கே.எல் ராகுலுக்கு தான் அந்த பதவி. முறைப்படியான அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ

நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் ஓய்வில் இருந்த அனுபவ வீரர்கள் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் இம்முறை தென்னாபிரிக்க மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement