Breaking News : கே.எல் ராகுலுக்கு தான் அந்த பதவி. முறைப்படியான அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் 26-ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி விராட் கோலியின் தலைமையின் கீழ் ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி அறிவிக்கப்பட்ட அணியில் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவிற்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டிருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வரும் ரஹானே தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவரின் துணைக்கேப்டன் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய துணைக்கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். அதன்படி துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ரோஹித் மும்பையில் இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டார்.

- Advertisement -

அப்படி பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹித் சர்மா இந்த முழு டெஸ்ட் தொடரையும் தவறவிட்டுள்ளார். இதனால் இந்திய அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள்? என்பதில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் ஏற்கனவே ரஹானேவிடம் இருந்து துணை கேப்டன் பதவியை பறித்து இருந்ததால் அவரிடம் வழங்க முடியாது. அவருக்கு அடுத்து அணியில் உள்ள சீனியர் வீரரான அஷ்வினுக்கும் இளம் வீரரான ராகுலுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் தற்போது ஒரு மணி நேரத்திற்கு முன்னர் பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கே.எல் ராகுலை தென் ஆப்பிரிக்க தொடருக்கான டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அதிகாரப்பூர்வமாக நியமித்து செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : முன்னணி ஐ.பி.எல் அணிக்கு ஆலோசகராகும் கவுதம் கம்பீர். எந்த அணிக்கு தெரியுமா ? – விவரம் இதோ

மேலும் காயமடைந்த ரோகித் சர்மாவிற்கு பதிலாக இந்தத் தொடரில் ராகுல் அதிகாரப்பூர்வமாக துணை கேப்டனாக செயல்படுவார் என்று ராகுலின் புகைப்படத்தோடு அவர்கள் இந்த செய்தியினை பகிர்ந்துள்ளனர். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement