முன்னணி ஐ.பி.எல் அணிக்கு ஆலோசகராகும் கவுதம் கம்பீர். எந்த அணிக்கு தெரியுமா ? – விவரம் இதோ

- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத துவக்கத்தில் 15-வது ஐபிஎல் சீசனானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கான போட்டிகளில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்ட இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 10 அணிகளுடன் இந்த தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

IPL

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே 8 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவிக்க தற்போது மீதமுள்ள இரண்டு அணிகள் தங்கள் அணியில் நேரடியாக மூன்று வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் தங்களது அணியில் தேர்வு செய்ய வேண்டிய மூன்று வீரர்ர்களை தேர்வு செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி தங்கள் அணிக்கான பயிற்சியாளர், ஊழியர்கள் என அனைவரையும் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையையும் அவர்கள் துரிதப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணியானது கேப்டனாக கே.எல்.ராகுலையும் மற்றொரு வீரராக இஷான் கிஷனையும் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு வெளிநாட்டு வீரராக ரஷீத் கானையும் லக்னோ அணி தேர்வு செய்துள்ளது.

Gambhir

மேலும் தற்போது அந்த அணியை பலப்படுத்தும் விதமாக அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்த கம்பீர் ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணியை வழிநடத்தி இருமுறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ டெஸ்ட் தொடருக்கான துணைக்கேப்டன் இவர்தானாம். அஷ்வின் கிடையாதாம் – வெளியான தகவல்

அவர் ஆலோசகராக நியமிக்கப்படுவதன் மூலம் அந்த அணியின் பலம் அதிகரிக்கும். ஆண்டி பிளவர் பயிற்சியாளராகவும், கம்பீர் ஆலோசகராகவும் நியமிக்கப்பட உள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது. மேலும் இதுகுறித்த ஒப்பந்தமும் பேசி முடிந்துள்ள நிலையில் அதிகாரபூர்வமாக கம்பீர் லக்னோ அணியுடன் இணைவார் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement