தெ.ஆ டெஸ்ட் தொடருக்கான துணைக்கேப்டன் இவர்தானாம். அஷ்வின் கிடையாதாம் – வெளியான தகவல்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் டிசம்பர் 26-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்று உள்ள அனைத்து வீரர்களும் தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு பயணித்து தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விராட் கோலி தலைமையிலான இந்த தொடரில் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார்.

IND-1

- Advertisement -

அதன்படி மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரோஹித் சர்மா பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதன்காரணமாக துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.

மேலும் இந்த துணை கேப்டன் பதவிக்கான போட்டியில் அஷ்வின் மற்றும் ராகுல் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவலின்படி அடுத்த இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் கே.எல் ராகுல் இந்த டெஸ்ட் தொடரிலும் துணை கேப்டனாக செயல்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.

Rahul

மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோன்று காயம் காரணாமாக டெஸ்ட் தொடரை தவறவிட்ட ரோகித் சர்மா நிச்சயம் இன்னும் இரு வாரங்களில் உடற்தகுதி பெற்று ஒருநாள் தொடரின் போது இந்திய அணியில் இணைவார் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் அணிக்கு பயிற்சியாளராக அவதாரம் எடுக்கும் டேல் ஸ்டெயின் – எந்த அணிக்கு தெரியுமா?

ஏற்கனவே விராட் கோலிக்கு பதிலாக அடுத்த கேப்டனாக மாறுவார் என்று கூறப்பட்ட ராகுல் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் துணைக்கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement