ஐ.பி.எல் அணிக்கு பயிற்சியாளராக அவதாரம் எடுக்கும் டேல் ஸ்டெயின் – எந்த அணிக்கு தெரியுமா?

Steyn
- Advertisement -

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 439 விக்கெட்டுகளையும், 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளையும், 47 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 64 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஐபிஎல் அணிக்காக டெக்கான் சார்ஜர்ஸ், குஜராத் லயன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ள அவர் 97 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் அடுத்த 15-வது ஐபிஎல் சீசனில் ஒரு முன்னணி ஐபிஎல் அணிக்காக பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் உடன் சேர்த்து புதிதாக இரண்டு அணிகள் இணைவதால் மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் மோதும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Steyn

அதன்படி தற்போது சன் ரைசர்ஸ் அணி அவர்களின் அணியில் மூன்று வீரர்களை தக்க வைத்துள்ளது. அந்த அணி நிர்வாகம் சார்பில் தற்போது வெளியான தகவலின்படி தலைமை பயிற்சியாளர் மோடியின் தலைமையில் பந்துவீச்சு பயிற்சியாளராக டேல் ஸ்டெய்ன் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரோடு சேர்த்து தமிழக ஆல்ரவுண்டர் ஹேமங் பதானியும் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கு திரும்பும் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவீர்களா? – அஷ்வின் அளித்த சுவாரசிய பதில்

சர்வதேச அளவில் மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவமுடைய டேல் ஸ்டெய்ன் நிச்சயம் சிறப்பான பயிற்சியாளராக திகழ்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த செய்தி தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement