சி.எஸ்.கே அணிக்கு திரும்பும் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவீர்களா? – அஷ்வின் அளித்த சுவாரசிய பதில்

Ashwin
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் அடுத்து வரும் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது புதிதாக இணைந்துள்ள இரண்டு அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் மோத உள்ளன. இந்த தொடருக்கு முன்னர் 8 அணிகளிலும் உள்ள வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

IPL
IPL Cup

அதன்படி டெல்லி அணி தக்க வைத்த நான்கு வீரர்களைத் தவிர மற்ற அனைவரையும் மெகா ஏலத்தில் விட்டிருக்கிறது. அதில் தமிழக வீரரான அஷ்வினும் தற்போதைய மெகா ஏலத்திற்கு வருகிறார். இந்நிலையில் இந்த ஏலத்தில் மீண்டும் சிஎஸ்கே அணி அவரை தேர்வு செய்யும் பட்சத்தில் சென்னை அணிக்காக அஸ்வின் விளையாடுவாரா? என்பது போன்று சமூக வலைத்தளத்தில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதிலாக பதிலளித்த அஷ்வின் கூறுகையில் : சென்னை அணி என்னுடைய மனதிற்கு நெருக்கமான ஒரு அணி. இந்த அணி எனக்கு ஒரு ஸ்கூல் போன்றது. இங்குதான் நான் எல்கேஜி, யுகேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பிறகு 11, 12 ஆகிய வகுப்புகளை வேறு ஒரு பள்ளியில் படித்தேன்.

ashwin 2

மீண்டும் காலேஜ் முடித்த பிறகு நான் வீட்டிற்கு தானே வந்தாக வேண்டும். அதே போன்று மீண்டும் சென்னை அணி இந்த ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் கட்டாயம் சிஎஸ்கே அணிக்காக திரும்பி சிறப்பாக விளையாடுவேன் என சுவாரஸ்யமான பதிலை அளித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் சொல்றேன் நீங்க வேணுனா பாருங்க. தெ.ஆ டெஸ்ட் தொடரில் இவர்தான் கலக்குவாரு – கங்குலி புகழ்ச்சி

சிஎஸ்கே அணிக்காக 2009 ஆம் ஆண்டு முதல் 15ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ள அஷ்வின் 94 போட்டிகளில் 90 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து 2016-17 புனே அணிக்காகவும் அதன்பிறகு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் கடைசியாக டெல்லி அணி மூலம் டிரேடிங் செய்யப்பட்டு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement