நான் சொல்றேன் நீங்க வேணுனா பாருங்க. தெ.ஆ டெஸ்ட் தொடரில் இவர்தான் கலக்குவாரு – கங்குலி புகழ்ச்சி

Ganguly
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. எதிர்வரும் 26-ஆம் தேதி துவங்க உள்ள இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு பயணித்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடப்போகும் இந்திய வீரர்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி இந்த தொடரில் அசத்தப்போகும் வீரர் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

IND

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஷ்ரேயாஸ் ஐயரை நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில் அவர் டெஸ்ட் போட்டிகளில் அன்மையில் அறிமுகமாகி இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடி இருந்தாலும் அவரது ஆட்டம் மிக சிறப்பாக இருக்கிறது. தற்போது நடைபெற உள்ள இந்த தென்னாப்பிரிக்க தொடர் அவருக்கு உண்மையான சோதனையாக அமையப்போகிறது. ஏனெனில் அவருடைய ஃபர்ஸ்ட் கிளாஸ் அவரேஜ் 50 ரன்களுக்கு மேல் நீண்ட காலமாக இருந்துள்ளது.

ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் அவர் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக 52 ரன்கள் சராசரியுடன் விளையாடி உள்ளார். அதுபோன்று ஒரு வீரர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிக கடினம். ஆனால் அப்படிப்பட்ட விடயத்தையும் செய்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது சர்வதேச அளவில் தனது திறமையை நிரூபிக்க டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரது அறிமுக போட்டியில் அவர் விளையாடிய விதம் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி.

Iyer-5

இருப்பினும் இந்த தென்னாப்பிரிக்க தொடர் அதேபோன்று இங்கிலாந்து தொடர் போன்றவை அவருக்கு சவாலானதாக இருக்கலாம். ஏனெனில் அயல் நாட்டு மைதானங்களில் அதிக வேகத்தையும், பவுன்ஸையும் அட்ஜெஸ்ட் செய்து கணித்து ஆடுவதில் சிரமம் இருக்கும். ஆனாலும் என்னைப்பொறுத்தவரை நிச்சயம் ஷ்ரேயாஸ் ஐயர் எந்த மைதானத்திலும் நின்று விளையாடக் கூடியவர் அதனால் இந்த தென்னாப்பிரிக்க தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணருவார் என கங்குலி அவரை புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஸ்திரேலியா அண்டர் 19 அணிக்காக தேர்வாகிய சென்னை பையன் – யார் இந்த நிவேதன் ராதாகிருஷ்ணன்?

அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர் தான் களமிறங்கிய முதல் இன்னிங்சில் சதமும், 2-வது இன்னிங்சில் அரைசதமும் அடித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement