- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2024 டி20 உ.கோ முதல் நாளில் ரோஹித், பாண்டியா பேசிக்கல.. அவர் தான் சேத்து வெச்சாரு.. விமல் குமார் பேட்டி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி உள்ளிட்ட அனைவருமே மிகவும் முக்கிய பங்காற்றினர். அதே போல ஹர்திக் பாண்டியாவும் ஆல் ரவுண்டராக சிறப்பாக விளையாடி இந்தியாவின் சரித்திர வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

சொல்லப்போனால் அதற்கு முன் நடந்த ஐபிஎல் 2024 தொடரில் ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் பாண்டியா தலைமையில் சுமாராக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.

- Advertisement -

முதல் நாளில் பேசிக்கல:

அதனால் அவருக்கு சூரியகுமார், பும்ரா உள்ளிட்ட சொந்த அணி வீரர்களே ஆதரவாக இல்லையென்று செய்திகள் வெளிவந்தன. மேலும் 5 கோப்பைகளை வென்று கொடுத்த சீனியர் என்று பார்க்காமல் கேப்டனான முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை பவுண்டரிக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தினார். அதனால் பாண்டியாவுக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகவும் செய்திகள் காணப்பட்டன.

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையின் முதல் நாளில் பாண்டியா மற்றும் ரோஹித் பேசிக் கொள்ளவில்லை என இந்தியாவின் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் விமல் குமார் தெரிவித்துள்ளார். அப்போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அனைவரையும் சமாதானப்படுத்தியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “வலைப்பயிற்சியை பார்க்க சென்ற போது பாண்டியா மற்றும் ரோஹித்கிடையே என்ன நடக்கிறது என்பதை நான் கவனித்தேன்”

- Advertisement -

ஒன்றிணைத்தை டிராவிட்:

“முதல் நாளில் பேசிக்கொள்ளாத அவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளியிருந்தனர். ஆனால் இரண்டாவது நாள் அவர்கள் மூலையில் ஒன்றாக உட்கார்ந்து நீண்ட நேரம் பேசியதை பார்த்தேன். அந்த தருணமே இந்த அணியை நிர்ணயித்தது. அங்கே கேமரா உட்பட எதுவுமில்லை. ரோகித் – பாண்டியா பேசியதை பார்த்த எனக்கு “நான் பார்ப்பது உண்மை தானா?” என்ற வகையில் தோன்றியது. ஏனெனில் பொதுவெளியில் நிறைய கருத்துக்கள் காணப்பட்டது”

இதையும் படிங்க: 358 ரன்ஸ்.. இலங்கையை வெளுத்த ரூட்.. ரோஹித்தை முந்தி.. இங்கிலாந்தின் ஜாம்பவானாக ஆல் டைம் சாதனை

“அதன் பின் அடுத்த 3 நாட்கள் ரோஹித் மற்றும் பாண்டியா ஒன்றாக சேர்ந்து பேட்டிங் செய்தனர். பாண்டியாவிடம் பேட்டிங், பவுலிங் ஆகியவை பற்றி ரோஹித் பேசினார். இதற்கான முழு பாராட்டுக்கள் ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித்தை சேரும். குறிப்பாக விராட், பாண்டியா, ரோஹித் போன்ற பெரிய வீரர்களை ஒன்றிணைத்ததில் டிராவிட் பெரிய பங்காற்றினார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். முன்னதாக ஃபைனலில் கடைசி ஓவரை வீசி வெற்றியை பெற்றுக் கொடுத்த பாண்டியவை ரோகித் சர்மா முத்தமிட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -