ரோஹித் சர்மா இப்படி காட்டடி அடிக்க காரணமே இதுதான். அதுதான் சக்ஸஸ்க்கும் காரணம் – விக்ரம் ரத்தோர் கருத்து

Vikram-Rathour
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசியின் 13-ஆவது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்முறை சொந்த மண்ணில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தினை இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது என்று இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பலராலும் பேசப்பட்ட வேளையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அவர்கள் கூறியது போலவே இந்த தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

அதோடு இதுவரை தாங்கள் விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் அசைக்க முடியாத அணியாக இருக்கும் இந்திய அணி கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியையும் வீழ்த்தி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு நல்ல நம்பிக்கையுடன் செல்லும் என்பது உறுதி.

- Advertisement -

அதேபோன்று அரையிறுதியில் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தினை பிடிக்கும் அணியுடன் மோத இருக்கும் இந்திய அணி கட்டாயம் அந்த போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணி இப்படி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதி செய்ததற்கு முக்கிய காரணம் ரோகித் சர்மாவின் அதிரடியான பேட்டிங்தான் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்த தொடர் முழுவதுமே ரோகித் சர்மா அதிரடியாக விளையாட வேண்டும் என்று முடிவு செய்து விளையாடி வருகிறார். அவரே தனிப்பட்ட முறையில் இந்த ஐடியாவை கையில் எடுத்து அதற்கு ஏற்றாற்போன்ற இப்படி அதிரடியாக விளையாடி வருகிறார். ஏனெனில் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் அனைவரும் சிறப்பாக விளையாட முடியும்.

- Advertisement -

ஆனால் பேட்டிங்கிற்கு சற்று சவாலாக இருக்கும் மைதானத்தில் பொறுமையாக இருந்து இறுதியில் ரன்களை குவிப்பதை விட ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி ஒரு பெரிய அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டால் பின்னால் வரும் வீரர்களுக்கு ரன் குவிப்பை மேலே கொண்டு செல்ல அது சரியாக இருக்கும் என்று நினைத்தே ரோகித் சர்மா போட்டியின் ஆரம்பத்திலிருந்தே சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசுகிறார்.

இதையும் படிங்க : இந்திய அணியை பாக்கும் போது எனக்கு 80களில் மிரட்டுன அவங்க நியாபகம் வருது.. ரமீஸ் ராஜா ஓப்பன்டாக்

இப்படி தனது அணிக்காக சரியான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று அந்த பொறுப்பினை தானே கையில் எடுத்தது அவருடைய கேப்டன்ஷிப் பண்பை வெளிகாட்டுகிறது என விக்ரம் ரத்தோர் அவரது இந்த பேட்டிங் அணுகுமுறையை பாராட்டியிருந்தார். விக்ரம் ரத்தோர் கூறியது போலவே : இந்த உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா இதுவரை 8 போட்டியில் பங்கேற்றுள்ள ரோஹித் சர்மா 55 ரன்கள் சராசரியுடன் கிட்டத்தட்ட 122.78 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிரடியாக விளையாடி 442 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement