IND vs AUS : அக்சர் பட்டேலை டீம்ல ஏன் சேத்தோம்னு இப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் – விக்ரம் ரத்தோர் கருத்து

Vikram-Rathour
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

IND vs AUS

- Advertisement -

இந்திய அணி சார்பாக முதல் இன்னிங்ஸில் ஜடேஜா 5 விக்கெட்களையும் அஸ்வின் 3 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர். பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 400 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 120 ரன்களையும், அக்சர் பட்டேல் 84 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியானது தற்போது 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்த வேளையில் ஜடேஜாவை போன்ற செயல்படும் அக்சர் பட்டேலை சேர்த்தது ஏன்? குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? என சில கேள்விகள் எழுந்தன.

Axar Patel

இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறுகையில் : இந்த போட்டியில் மூன்று ஸ்பின்னர்களுடன் விளையாட வேண்டும் என்று முடிவு செய்து விட்டோம். ஆகையால் யாரை விளையாட வைப்பது என்று யோசித்தபோது அக்சர் பட்டேலின் பேட்டிங் அவருக்கு ஒரு போனஸ் ஆக அமைந்தது.

- Advertisement -

ஏனெனில் அவரால் நன்றாக பேட்டிங் செய்ய முடியும். அதுமட்டும் இன்றி இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்றால் பவுலராகவும் ஒரு நல்ல ரெகார்டை வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் அக்சர் பட்டேல் ஏற்கனவே இந்திய மண்ணில் ஆறு முதல் ஏழு போட்டியில் மட்டுமே விளையாடி 40-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இதையும் படிங்க : IND vs AUS : 3 ஆவது நாளே உறுதியான இந்திய அணியின் வெற்றி – இன்னிங்ஸ் வெற்றிக்கே வாய்ப்பிருக்கு

இதன் காரணமாகவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக விக்ரம் ரத்தோர் தெரிவித்தார். இந்த போட்டியில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் 174 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 84 ரன்கள் குவித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement