IND vs AUS : 3 ஆவது நாளே உறுதியான இந்திய அணியின் வெற்றி – இன்னிங்ஸ் வெற்றிக்கே வாய்ப்பிருக்கு

KS-Bharat
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தங்களது முதல் இன்னிங்சில் 177 ரன்களில் முடித்துக் கொண்டது.

IND vs AUS

- Advertisement -

அதன்பிறகு தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் குவித்து அசத்தியது. இதன் மூலம் 223 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இந்த முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா அதிகபட்சமாக 120 ரன்களையும், ஆல்ரவுண்டர் ஜடேஜா 70 ரன்களையும், அக்சர் பட்டேல் 84 ரன்கள் குவித்து அசத்தினர்.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் குவித்துள்ளதால் தற்போது மூன்றாவது நாளே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது என்று கூறலாம். ஏனெனில் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் இன்னும் ஆஸ்திரேலியா அணி 40 ஓவர்கள் வரை பேட்டிங் செய்ய வேண்டும்.

Jadeja 1

அது தவிர்த்து இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ளதால் நிச்சயம் ஆஸ்திரேலியா அணியால் இரண்டரை நாட்கள் பேட்டிங் செய்ய முடியாது. அதுமட்டும் இன்றி இந்த 223 ரன்களை அவர்கள் கடந்த பின்னரே அவர்களது முன்னிலை இந்திய அணிக்கான இலக்காக நிர்ணயிக்கப்படும். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய சிறிது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி 7 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்துள்ளது.

- Advertisement -

இப்படி பார்க்கையில் நிச்சயம் இந்த மூன்றாவது நாள் ஆட்டம் முடிவதற்குள் இந்திய அணி 4 முதல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் பாதி ஆட்டம் இன்றைய மூன்றாவது நாளில் முடிந்துவிடும். மேலும் நாளைய நான்காவது நாள் ஆட்டத்தில் நிச்சயம் போட்டியின் முடிவே தெரிந்துவிடும் என்பது போல் தெரிகிறது.

இதையும் படிங்க : ஒருமாதம் கடந்த நிலையில் தனது புகைப்படத்தை பகிர்ந்து நற்செய்தி சொன்ன ரிஷப் பண்ட் – விவரம் இதோ

ஏனெனில் ஆஸ்திரேலிய அணி இந்த 223 ரன்களை கடப்பதற்கே பெரிய போராட்டத்தை அளிக்க வேண்டும். அதன் பிறகு முன்னிலை பெற்று இந்திய அணியை வீழ்த்துவது எல்லாம் சாத்தியம் கிடையாது. எனவே இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement