ஒருமாதம் கடந்த நிலையில் தனது புகைப்படத்தை பகிர்ந்து நற்செய்தி சொன்ன ரிஷப் பண்ட் – விவரம் இதோ

Rishabh-Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்டில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பிய அவருக்கு டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு அங்கிருந்தவர்களின் உதவி மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் பின்னர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றார்.

விபத்தில் ஏற்பட்ட படு காயங்கள் காரணமாக அவரது உடல்நிலை சீரடைய ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆகும் என்பதனால் இந்த ஆண்டின் பெரும்பாலான போட்டிகளை ரிஷப் பண்ட் தவற விட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவருக்கு மேற்கொள்ளப்பட இருந்த அனைத்து அறுவை சிகிச்சைகளையும் முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் வீட்டில் இருந்தே காயம் ஆறும் வரை ஓய்வெடுப்பார் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்ற நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவர் கடந்த பிப்ரவரி எட்டாம் (8)-ஆம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்து : வெளியில் உட்கார்ந்து புதிய காற்றை சுவாசிப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் உடல் நலம் குணமடைந்து வருவது குறித்து ஒரு கருத்தினை மீண்டும் பதிவிட்டுள்ளார். அதில் கையில் ஊன்று கோளுடன் நிற்கும் படி ஒரு புகைப்படத்தை பதிவிட்டு :

- Advertisement -

“ஒருபடி முன்னே, ஒருபடி வலிமையாக, ஒருபடி மேன்மையாக இருக்கிறேன்” என்று வாக்கிங் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு நற்செய்தி சொல்லியுள்ளார். படிப்படியாக குணமடைந்து வரும் அவர் விரைவில் குணமடைந்து கிரிக்கெட் களத்திற்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதையும் படிங்க : இம்முறை விளையாடாத கடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை வெற்றியின் 5 இந்திய ஹீரோக்கள்

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் தொடரை முழுவதுமாக தவறவிட்ட அவர் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரையும் தவறவிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட வேளையில் தற்போது அவர் நடக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால் விரைவில் அவர் குணமடைந்து உலகக்கோப்பை தொடருக்குள் அணியில் இடம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement