இரண்டு போட்டியில் சொதப்புனாருன்னு அவரை அணியில் இருந்து தூக்க முடியுமா? – விக்ரம் ரத்தோர் ஆதரவு

Rathour
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியானது சூப்பர் 12 சுற்றில் இதுவரை தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இன்னும் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக மட்டுமே விளையாட இருப்பதால் நிச்சயம் இந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும்.

IND vs NED Rohit Sharma Axar Patel KL Rahul

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடரில் மிக பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது அரையிறுதி வாய்ப்பை குறிவைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிகச்சிறப்பாக இருப்பதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் துவக்க வீரரான கே எல் ராகுல் இந்த இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்துள்ளதால் அவரது இடத்தின் மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்துள்ளது.

இதன் காரணமாக அக்டோபர் 30 தேதி நாளை நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்று கூட கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஏற்கனவே அணியில் இடதுகை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பண்ட் இதுவரை இரண்டு போட்டிகளிலும் விளையாடாததன் காரணமாக ராகுலை நீக்கிவிட்டு அந்த இடத்தில் அவரை சேர்க்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது.

KL-Rahul

இந்நிலையில் கே எல் ராகுலின் இடம் குறித்து தற்போது விளக்கம் ஒன்றினை பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : கேல் ராகுலுக்கான மாற்று வீரர் குறித்து நாங்கள் யோசித்தது கூட கிடையாது. அவர் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மீண்டு வந்திருந்தாலும் இதுவரை பயிற்சி போட்டிகளில் அற்புதமாகவே விளையாடி உள்ளார். இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களை அடிப்படையாக வைத்து அவரை குறை சொல்வது ஏற்புடையது அல்ல. நிச்சயம் கே.எல். ராகுல் அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டிய தேவையே கிடையாது. அது பற்றி நாங்கள் யோசித்ததும் கிடையாது என்று விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா, 3வது போட்டி நடக்கும் பெர்த் மைதானம் எப்படி – புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

இப்படி அவர் கூறியுள்ளதால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் அவர் தொடர்வார் என்று தெரிகிறது. அதேபோன்று இந்திய அணி ஏற்கனவே முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளதால் நிச்சயம் பிளேயிங் லெவனில் எந்தவித மாற்றமும் இன்றி இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறவே முனைப்பு காட்டும் என்பதனால் எந்த ஒரு மாற்றமும் அணியில் இருக்காது என்று கூறப்படுகிறது.

Advertisement