ஸ்ரேயாஸ், கில் 2வது போட்டியில் நீக்கப்படுவார்களா? ரசிகர்களின் கேள்விக்கு.. பேட்டிங் கோச் பதில்

Vikram Rathore 4
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதலாவது போட்டியில் இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 190 ரன்கள் முன்னிலை பெற்றும் கடைசியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

அந்த தோல்விக்கு பேட்டிங் துறையில் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. சொல்லப்போனால் கடந்த வருடம் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை உட்பட வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி ஓரளவு நல்ல ஃபார்மில் இருக்கும் இவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலங்களாகவே தடுமாறி வருகிறார்கள்.

- Advertisement -

ரசிகர்களின் கேள்வி:
குறிப்பாக சுப்மன் கில் 17 டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் திண்டாடி வருகிறார். மறுபுறம் சமீபத்திய தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் உட்பட கம்பேக் கொடுத்ததிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயரும் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறி வருகிறார். எனவே அவர்களை நீக்கிவிட்டு சர்பராஸ் கான், ரஜத் படிடார் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற தடுமாறும் பேட்ஸ்மேன்கள் விரைவில் ரன்கள் அடிப்பார்கள் என்று நம்புவதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். எனவே அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம் என்று மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர்களின் திறமையில் எங்களுக்கு எந்த கேள்வியும் இல்லை. அந்த இருவருமே நல்ல வீரர்கள்”

- Advertisement -

“பொதுவாக வீரர்கள் இது போன்ற மோசமான காலங்களையும் ஃபார்மையும் சந்திப்பார்கள். இருப்பினும் அது போன்ற தருணங்களில் அவர்கள் எந்த மாதிரியான மனநிலையில் இருந்து எப்படி மீள்வதற்கு தயாராகிறார்கள் என்பதை நாங்கள் பார்க்கிறோம். அந்த வகையில் சிறப்பாக தயாராகி வரும் அவர்கள் வலைப்பயிற்சியில் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்”

இதையும் படிங்க: எங்க பேச்சை கேக்காத உங்களுக்கு இனிமே டீம்ல இடமில்ல.. இளம்வீரர் மீது – பி.சி.சி.ஐ அதிருப்தி

“எனவே இது சிறிய நேரத்தை மட்டுமே பொருத்ததாகும். இந்த 2 வீரர்களிடம் இருந்து விரைவில் பெரிய செயல்பாடு வெளிப்படும் என்று நான் நம்புகிறேன். அவர்களைப் போன்ற இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய விளையாடவில்லை. எனவே அவர்களுடைய வாய்ப்பில் நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். கில், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் போன்றவர்கள் கண்டிப்பாக விரைவில் ரன்கள் அடிப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement