எங்க பேச்சை கேக்காத உங்களுக்கு இனிமே டீம்ல இடமில்ல.. இளம்வீரர் மீது – பி.சி.சி.ஐ அதிருப்தி

Ishan-Kishan
- Advertisement -

இந்திய அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷனுக்கு இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இப்படி இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாததற்கு மேலும் ஒரு காரணம் இருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டது. அதாவது கடந்த ஓராண்டாக இஷான் கிஷன் தொடர்ச்சியாக மூன்று வகையான இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பிடித்து வந்தாலும் அவருக்கு போதிய அளவு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக பெரும்பாலும் வாட்டர் பாயாக மட்டுமே இருந்த அவர் அதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே மனச்சோர்வாக இருப்பதாக கூறி இந்திய அணியில் இருந்து வெளியேறியதாகவும் பேசப்பட்டது.

அதேபோன்று பிசிசிஐ-யையும் அவர் டெஸ்ட் அணியில் விளையாட வேண்டுமெனில் ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. ஆனால் இதுவரை அவர் ஜார்கண்ட் மாநில அணிக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடச் செல்லவில்லை. இதன் காரணமாக பிசிசிஐ அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதோடு எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் அவரை தேர்வு செய்ய போவதில்லை என்ற திட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் ஏகப்பட்ட வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் அணியில் இருந்தாலும் தங்களது உத்தரவை கேட்காத அவருக்கு வாய்ப்பினை மறுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : இந்திய அணி அங்க சம்பவம் பண்ணும் போது.. இதெல்லாம் சகஜம்.. ஹைதராபாத் தோல்வி பற்றி விக்ரம் ரத்தோர்

இஷான் கிஷான் இந்திய அணிக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகள் மற்றும் 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement