இந்திய அணி அங்க சம்பவம் பண்ணும் போது.. இதெல்லாம் சகஜம்.. ஹைதராபாத் தோல்வி பற்றி விக்ரம் ரத்தோர்

Vikram Rathore 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில் அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட சிறப்பாக விளையாடிய இந்தியா 190 ரன்கள் முன்னிலையை பெற்று வெற்றியை 90% கையில் வைத்திருந்தது.

அதனால் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு 2வது இன்னிங்ஸில் ஓலி போப் 196 ரன்கள் விளாசி சவாலை கொடுத்தார். அதை பயன்படுத்தி இங்கிலாந்து நிர்ணயித்த 231 ரன்களை சேசிங் செய்த இந்தியா நான்காவது நாளில் சுழலுக்கு சாதகமாக மாறிய ஹைதெராபாத் பிட்ச்சில் 202 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று சொன்ன இங்கிலாந்து தற்போது அதை செயலிலும் செய்து காட்டி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

இதெல்லாம் சகஜம்:
இந்நிலையில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியினர் மிகுந்த தைரியத்துடன் விளையாடியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். அத்துடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் நாம் மகத்தான வெற்றிகளை பெறும் போது அவர்களும் இந்திய மண்ணில் இது போன்ற வெற்றிகளை பதிவு செய்வதில் ஆச்சரியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி இரண்டாவது போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து அணி தைரியமாக செயல்பட்டனர். அவர்கள் வாய்ப்பை எடுத்தனர். அது அவர்களுக்கு வேலை செய்தது. குறிப்பாக ஓலி போப் அபாரமான இன்னிங்ஸ் விளையாடினார். எங்களுடைய தரமான ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் விளையாடியது போன்ற இன்னிங்ஸை நான் அதிகம் பார்த்ததில்லை”

- Advertisement -

“எங்களுக்கு எந்த அழுத்தமும் இருப்பதாக நான் கருதவில்லை. இந்தியாவில் நாம் விளையாடும் போது வெற்றியை எதிர்பார்ப்போம். அதை நம் வீரர்கள் தற்போது தொடர்ச்சியாக செய்கின்றனர். அந்த வரிசையில் முடிவைப் பற்றி கவலைப்படாமல் நல்ல கிரிக்கெட்டை விளையாடுங்கள் என்பதே இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளர் குழுவின் செய்தியாகும். பொதுவாக எதிரணிகளும் நன்றாக தயாராகி வருவார்கள்”

இதையும் படிங்க: சர்பராஸ், படிடார் ஆகியோரில் 2வது போட்டியில் அறிமுகமாக விளையாடப் போவது யார்? பேட்டிங் கோச் பதில்

“நாம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் வெற்றிகளை பெற்றுள்ளோம். அதே போல அவர்களும் இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் வெல்வதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூலாக கூறினார். அந்த வகையில் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அதை எதிர்பார்த்ததாக தெரிவிக்கும் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரின் இந்த கருத்துக்கு ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து 2வது போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

Advertisement