2010 ஆம் ஆண்டே ஜடேஜா இப்படித்தான் வருவாருன்னு தோனி என்கிட்ட சொன்னாரு – நினைவை பகிர்ந்த விக்ரம் சந்திரா

Vikram-Chandra-1
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ஜடேஜா கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 58 டெஸ்ட் போட்டிகள், 168 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்றுள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் பேட்டிங்கிலும் கை கொடுக்க கூடியவர். அதோடு மட்டுமின்றி உலகின் நம்பர் ஒன் ஃபீல்டராகவும் ஜடேஜா திகழ்வதால் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் முக்கிய வீரராக விளையாடி வருகிறார்.

அதிலும் குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளாக இவரது பேட்டிங் மிக சிறப்பாக மாறி உள்ளது. இதன் காரணமாக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக விளையாடி வருகிறார். தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவரது இடத்தில் பினிஷராக தற்போது ஜடேஜா களமிறங்கி பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் கூட பேட்டிங்கில் 175 ரன்களை அவுட்டாகாமல் குவித்த இவர் பவுலிங்கிலும் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதனை தொடர்ந்து அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது விக்ரம் சந்திரா என்கிற ஒரு நிபுணர் ஜடேஜா குறித்து தோனி வழங்கிய பேட்டி ஒன்றினை பற்றி தற்போது தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : கடந்த 2010ஆம் ஆண்டு நான் தோனியுடனான ஒரு நேர்காணலை மேற்கொண்டேன். அப்போது ஜடேஜா தொடர்ச்சியாக சொதப்பி வந்ததால் இந்திய அணியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வந்தன.

- Advertisement -

ஆனாலும் தோனி ஜடேஜாவை ஆதரித்து அவருக்கு தேவையான வாய்ப்புகளை கொடுத்து வந்தார். அதோடு ஜடேஜா குறித்து தோனி கூறுகையில் : நாம் ஜடேஜா விஷயத்தில் இப்போது செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தற்போது அமைதியாக அவரது ஆட்டத்தை பார்க்க வேண்டும். நிச்சயம் அவர் இந்தியாவே பார்க்கும் ஆல்ரவுண்டராக மாறுவார் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க : ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஜடேஜா மற்றும் பண்ட் ஆகியோர் முன்னேற்றம் – எந்த இடம் தெரியுமா?

மேலும் இந்தியாவுக்கு தேவையான ஒரு தவிர்க்கமுடியாத ஆல் ரவுண்டராக ஜடேஜா நிச்சயம் மாறுவார் என பண்ணிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தோனி கூறியதாக அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement