ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஜடேஜா மற்றும் பண்ட் ஆகியோர் முன்னேற்றம் – எந்த இடம் தெரியுமா?

Pant
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு பின்னர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கான பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல்ரவுண்டர் என அனைத்து வகையான தரவரிசைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

ashwin 2

- Advertisement -

அதன்படி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி முடிவடைந்த பின்னர் வெளியான மூன்று வகையான டெஸ்ட் தரவரிசையிலும் இந்திய அணியின் வீரர்கள் டாப் 10-ல் இடம்பிடித்து அசத்தியுள்ளனர்.

அந்தவகையில் இலங்கை அணியை முதலாவது டெஸ்ட் போட்டியில் துவம்சம் செய்து பேட்டிங்கில் 175 ரன்கள் மற்றும் பந்து வீச்சில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜடேஜா ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆல்ரவுண்டருக்கான பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அவரைத் தொடர்ந்து ஜேசன் ஹோல்டர், ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து முறையே 2,3,4 ஆகிய இடங்களில் உள்ளனர்.

Jadeja

இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ஜடேஜா தற்போது 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பெற்றுள்ளார். அதேபோன்று பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி ஏற்கனவே 7-ஆம் இடத்தில் இருந்து தற்போது 2 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்திற்கு சென்றுள்ளார்.

- Advertisement -

இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தற்போது இந்த டாப் 10-ல் 10-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இப்படி இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களை போல பந்துவீச்சு துறையிலும் தமிழக வீரரான அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 40 – 50 லாம் ஒரு ரன்களா! அடுத்தடுத்த சதம் விளாசி இந்திய அணிக்கு திரும்ப துடிக்கும் இளம் வீரர்

இலங்கை அணிக்கெதிராக மொஹாலி மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்திய அணியனாது அடுத்ததாக வரும் மார்ச் 12 ஆம் தேதி பெங்களூரு மைதானத்தில் நடைபெற இருக்கும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. அதோடு இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது கூடுதல் சிறப்பம்சம்.

Advertisement