40 – 50 லாம் ஒரு ரன்களா! அடுத்தடுத்த சதம் விளாசி இந்திய அணிக்கு திரும்ப துடிக்கும் இளம் வீரர்

Shaw
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக கருதப்படும் வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி துவங்கிய இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் மட்டும் இப்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4வது சுற்றுப் போட்டிகள் வரும் ஐபிஎல் 2022 தொடருக்கு பின் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி எலைட் குரூப் ஹச் பிரிவில் இடம் பிடித்திருந்தது.

Baba Abarajith Baba Indrajith Ranji Trophy 2022

- Advertisement -

இதையடுத்து துவங்கிய இந்த லீக் சுற்றில் டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியை டிரா செய்த தமிழ்நாடு ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் இந்த தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

இந்திய அணியின் வாய்ப்பாக ரஞ்சி:
பொதுவாகவே இந்திய அணியில் விளையாடும் ஸ்டார் நட்சத்திர வீரர்கள் அவ்வப்போது ரன்கள் குவிக்க முடியாமல் தங்களின் பார்ம்மை இழந்து தவிப்பார்கள். அந்த வேளையில் இந்த ரஞ்சி கோப்பைக்கு திரும்பி மிகச் சிறப்பாக விளையாடி இழந்த தங்களின் பார்மை மீட்டெடுத்து மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுவார்கள். அந்த வகையில் வரலாற்றில் சௌரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற பல ஜாம்பவான்கள் இந்தியாவுக்காக தடுமாறிய போது இந்த ரஞ்சி கோப்பையில் விளையாடி இழந்த தங்களது பார்மை மீட்டெடுத்து மீண்டும் இந்திய அணியில் வெற்றிகரமாக காலடி வைத்தார்கள்.

pujara 1

அந்த வரிசையில் தற்போதைய இந்திய அணியில் கழட்டி விடப்பட்டுள்ள மூத்த அனுபவ வீரர்கள் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் இந்த ரஞ்சி கோப்பையில் முறையே சௌராஷ்டிரா மற்றும் மும்பை ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார்கள். இருப்பினும் இந்த தொடரில் ஓரளவு சுமாராக செயல்பட்டு வரும் இவர்களில் முதல் போட்டியில் சதம் அடித்த அஜிங்கிய ரஹானே கடைசியாக பங்கேற்ற 3 இன்னிங்ஸ்களில் 2 டக் அவுட்டானர். மறுபுறம் சௌராஷ்ட்ரா அணிக்காக ஆரம்பம் முதலே பெரிய அளவில் ரன்கள் குவிக்க திணறும் புஜாரா கடைசி 3 இன்னிங்ஸ்களில் 8, 28, 64* என சுமாரான ரன்களை மட்டுமே அடித்தார்.

- Advertisement -

40 – 50 லாம் ஒரு ரன்களா:
இவர்களை போலவே கடந்த 2020 வாக்கில் இந்திய அணியில் முக்கிய இடம் வகித்த இளம் வீரர் பிரித்வி ஷா மோசமாக விளையாடியதன் காரணமாக கழற்றி விடப்பட்டார். அதன்பின் ஐபிஎல் தொடரிலும் பெரிய அளவில் சோபிக்க தவறிய அவர் தற்போது ரஞ்சி கோப்பையில் ரகானே இடம் வகிக்கும் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணியில் மீண்டும் நுழைவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் கடைசி 3 இன்னிங்ஸ்களில் 9, 44, 53 என சுமாரான ரன்களை மட்டுமே எடுத்து வரும் அவரால் இதுவரை சதம் அடிக்கவில்லை.

Shaw

இந்நிலையில் 40 – 50 ரன்களை அடிக்கும் தனது செயல்பாடு பற்றி அதிருப்தி தெரிவித்துள்ள பிரிதிவி ஷா தன் மீதே ஏமாற்றம் அடைந்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய செயல்பாட்டால் எனக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. ஏனெனில் கிரிக்கெட்டில் 40 – 50 ரன்கள் என்பது ஒரு பெரிய விஷயமே கிடையாது. ஆனாலும் இப்போதைய நிலைமை சரிதான். தற்போது சிறப்பாக பேட்டிங் செய்யத் துவங்கியுள்ள எனக்கு ஏதோ ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது” என கூறினார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் அடிக்கணும்:
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த அண்டர்-19 உலக கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த பிரித்வி ஷா அதன் காரணமாக அடுத்த வருடத்திலேயே 3 வகையான இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் அந்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள தவறிய அவர் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி இந்திய அணிக்குள் நுழையும் முயற்சியில் உள்ளார். குறிப்பாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக தக்க வைக்கப்பட்டுள்ள அவர் விரைவில் துவங்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று அந்த முயற்சியில் மேலும் தீவிரமாக ஈடுபட உள்ளார்.

இதையும் படிங்க : காயமடைந்த தீபக் சாகர் எப்போது சி.எஸ்.கே அணியில் விளையாடுவார்? – அதிகாரபூர்வ தகவல் இதோ

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அடுத்த இரண்டரை மாதத்திற்கு ஐபிஎல் தொடர் உள்ளிட்ட வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாட அனைவரும் கவனம் செலுத்துவார்கள். அதன் பின் மீண்டும் நடைபெறும் ரஞ்சி கோப்பையில் உடனடியாக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். எனவே இவை அனைத்துமே குறுகிய காலத்திற்குள் நம்மை எப்படி மாற்றிக்கொண்டு சூழலுக்கு ஏற்றவாறு உட்படுத்தி கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது” என கூறினார்.

Advertisement