காயமடைந்த தீபக் சாகர் எப்போது சி.எஸ்.கே அணியில் விளையாடுவார்? – அதிகாரபூர்வ தகவல் இதோ

Chahar
- Advertisement -

சென்னை அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை அணிக்காக விளையாடி வந்த நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பந்துவீச்சில் அற்புதமான ஸ்விங்கை செய்யும் இவர் பவர் பிளே ஓவர்களிலேயே விக்கெட்டை வீழ்த்தும் திறமை கொண்டவர் என்பதினால் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் அவரை 14 கோடி கொடுத்து மீண்டும் சென்னையில் ஏலத்தில் எடுத்தது.

Deepak

- Advertisement -

இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது காயமடைந்த தீபக் சாஹர் அங்கிருந்து நேராக பெங்களூருவில் சென்று தேசிய அகாடெமியில் தனது காயத்திற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். மேலும் தீபக் சாஹர் காயத்தில் இருந்து குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என்பதனால் இந்த வரும் ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளை அவர் தவற விடுவார் என்று கூறப்பட்டது.

இதன் காரணமாக சிஎஸ்கே அணி பெரிய பின்னடைவை சந்திக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஏனெனில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர் பெரும்பாலான போட்டிகளில் விளையாட வில்லை என்றால் அது சென்னை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டது.

deepak

இந்நிலையில் தற்போது பெங்களூரில் தங்கி சிகிச்சை மேற்கொண்டு வரும் அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் மாதம் பாதியில் அவர் அணியுடன் இணைவார் என்று கூறப்படுவது. குறிப்பாக ஏப்ரல் 12-ஆம் தேதி பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியிலோ அல்லது ஏப்ரல் 17-ஆம் தேதி குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலோ அவர் திரும்புவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது சிஎஸ்கே நிர்வாகம் சற்று நிம்மதி அடைந்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் முன்னர் வரை சென்னை அணி 6 போட்டிகளில் மட்டுமே பங்கேற்கும் என்பதனால் மீதியுள்ள போட்டிகளில் அவரை நிச்சயம் அணியில் எதிர்பார்க்கலாம் என்பதனால் தற்போது பெரிய சிக்கலில் இருந்து சிஎஸ்கே அணி தப்பியுள்ளது.

இதையும் படிங்க : ஆர்.சி.பி அணியின் புதிய கேப்டன் யார்? இறுதி முடிவை எடுத்த நிர்வாகம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

மேலும் தீபக் சாகர் அணிக்கு திரும்பும் வேளையில் சென்னை அணி இறுதி வரை பேட்ஸ்மேன்களை கொண்ட அணியாக முழு பலம் வாய்ந்த அணியாக மாறும் என்பதால் நடப்பு சாம்பியனான சி.எஸ்.கே நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் பிரமாதமான ஆபத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement