தோனி, விராட் கோலியவே விடமாட்டீங்க, 2019 உ.கோ சொதப்பலுக்கு நீங்க தான் காரணம் – ரசிகர்களுக்கு விஜய் சங்கர் மாஸ் பதிலடி

Vijay-Shankar
- Advertisement -

தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் 2018 வாக்கில் உள்ளூர் கிரிக்கெட்டில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவுக்காக விளையாட முயற்சித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் ஏற்கனவே இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அட்டகாசமாக செயல்பட்ட அம்பத்தி ராயுடு இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பைக்கு தேர்வாக தகுதியானவராக தன்னை நிரூபித்துக் கொண்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்குபவர் பந்து வீசுபவராகவும் இருக்க வேண்டும் என்று கருதிய தேர்வுக்குழு விஜய் சங்கரை தேர்வு செய்தது.

vijayshankar

- Advertisement -

குறிப்பாக 4வது இடத்தில் விளையாடுபவர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் அசத்தும் முப்பரிமான வீரராக இருக்க விரும்பியதால் விஜய் சங்கரை தேர்வு செய்ததாக அப்போதைய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறினார். அதனால் மனமுடைந்த அம்பத்தி ராயுடு 2019 உலக கோப்பையை பார்ப்பதற்கு 2 முப்பரிமான கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளதாக ட்விட்டரில் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

அதன் காரணமாக கடுப்பான தேர்வுக்குழு வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டிருந்த நிலையில் 2019 உலக கோப்பையில் வாய்ப்பு பெற்று 2 போட்டியில் மட்டுமே விளையாடிய விஜய் சங்கர் காயமடைந்து வெளியேறிய போது ஸ்டேண்ட் பை லிஸ்டில் முதல் வீரராக காத்திருந்த ராயுடுவுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மயங் அகர்வாலை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்து பழி வாங்கியது. அதனால் மேலும் மனமுடைந்த ராயுடு 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

யாரை விட்டாங்க:
மறுபுறம் அவருடைய கேரியரை முடிக்கும் அம்பாக வந்த விஜய் சங்கர் இந்தியாவுக்காக பெற்ற வாய்ப்புகளில் சுமாராக செயல்பட்டதால் மொத்தமாக கழற்றி விடப்பட்டார். அதிலிருந்தே உள்ளூர் கிரிக்கெட்டிலும் சொதப்பலாக செயல்பட்டு வரும் அவர் சமீப காலங்களில் ஐபிஎல் தொடரிலும் மோசமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2022 சீசனில் கோப்பை வென்ற குஜராத் அணியில் 4 போட்டிகளில் 19 ரன்களை 4.75 என்ற பள்ளிக் குழந்தையை விட மோசமான சராசரியிலும் 54.29 என்ற கிளப் கிரிக்கெட்டில் விளையாடும் பேட்ஸ்மேனை விட படுமோசமான ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்தார்.

- Advertisement -

அதனால் 3டி வீரர் என்று ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ள அவரை சமீப காலங்களில் தமிழக ரசிகர்களே கலாய்ப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் “3டி வீரர்” என ரசிகர்கள் தம்மை கலாய்த்தது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி 2019 உலகக்கோப்பையில் சுமாராக செயல்பட முக்கிய காரணமாக அமைந்ததாக விஜய் சங்கர் கூறியுள்ளார். இருப்பினும் தோனி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களையே விட்டு வைக்காத ரசிகர்கள் தம்மை மட்டும் விடுவார்களா என்று தெரிவிக்கும் அவர் அதற்காக கவலைப்படாமல் தொடர்ந்து முன்னேறுவதற்கு முயற்சித்து வருவதாக கூறியுள்ளார்.

Vijay

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது (கிண்டல்கள்) ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. நீங்கள் இது போன்ற வெளிப்புற சத்தங்களை தவிர்த்து விடலாம் என்று சொல்வது எளிதாகும். ஆனால் அதை தவிர்ப்பது அசாத்தியமாகும். ஏனெனில் உங்களை சுற்றியிருக்கும் சமூக வலைதளங்களால் நீங்கள் அதற்குள் சென்று ஏதாவது படிக்கும் போது அது உங்களது மனதிற்குள் சென்று பாதிப்பை ஏற்படுகிறது”

- Advertisement -

“இருப்பினும் அவை என்னை மிகவும் வலிமையாக்குகிறது என்று சொல்வேன். மேலும் இது போன்ற விமர்சனங்களை எம்எஸ் தோனி, விராட் கோலி போன்ற டாப் வீரர்களும் சந்தித்துள்ளார்கள். அப்படிப்பட்ட வீரர்களையும் மக்கள் விடுவதில்லை. பொதுவாக நீங்கள் சிறப்பாக விளையாடி அனைத்தும் நன்றாக சென்றால் அனைவரும் உங்களை பாராட்டுவார்கள். ஆனால் சுமாராக செயல்படும் போது மக்கள் அனைவரும் உங்களுக்கு எதிராக திரண்டு விடுவார்கள். எனவே அதைப் பற்றி நான் நினைக்காமல் என்னால் சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ரிச்சர்ட்ஸ், சச்சின் வரிசையில் அவர் இந்த நூற்றாண்டின் சிறந்த ப்ளேயர் – இந்திய வீரரை மனதார பாராட்டிய கபில் தேவ்

முன்னதாக இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட இவர் மீண்டும் கம்பேக் கொடுக்கும் அளவுக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் கூட அசத்தலாக செயல்படாடத நிலையில் ஐபிஎல் தொடரிலும் சுமாராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement