
ஐபிஎல் 2025 கிரிக்கெட் கோப்பையை ஒரு வழியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்ற சாதனை படைத்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்து வந்த தொடர் தோல்விகளை நிறுத்திய பெங்களூரு அணி மற்றும் விராட் கோலி முதல் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தனர். அந்த வெற்றிக்கு ஆர்சிபி அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய்களை கடனாக வாங்கிய அவர் மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தி வந்தார். இருப்பினும் அந்த நிறுவனங்கள் தோல்வியில் முடிந்ததால் இந்தியாவிலிருந்து தப்பிச்சென்ற அவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் பெங்களூரு அணியை 2008 ஏலத்தில் வாங்கிய முன்னணியை அவர் பகிர்ந்துள்ளார்.
இது பற்றி ராஜ்மணி யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் லீக் பற்றி லலித் மோடி (அப்போதைய ஐபிஎல் சேர்மேன்) பிசிசிஐ கமிட்டியை உருவாக்கியது என்னைக் கவர்ந்தது. ஒரு நாள் என்னை அழைத்த அவர் அணிகள் ஏலம் போக உள்ளதை சொன்னார். எனவே நீங்கள் அதை வாங்குகிறீர்களா? என்று அவர் கேட்டார். அதன் காரணமாக நான் 3 அணிகளை ஏலத்தில் கேட்டேன்”
“மும்பை அணியை மிகவும் சிறிய இடைவெளியில் வாங்குவதிலிருந்து இழந்தேன். 2008இல் பெங்களூரு அணியை நான் வாங்கிய போது ஐபிஎல் இந்திய கிரிக்கெட்டின் கேம் சேஞ்சராக இருக்கப் போவதை பார்த்தேன். அப்போது பெங்களூருவின் உணர்வை வெளிப்படுத்தும் துடிப்பான, ஆற்றல்மிக்க, கவர்ச்சிகரமான ஒரு அணியை வாங்குவதே என்னுடைய தொலைநோக்கு பார்வையாக இருந்தது”
“அதற்காக நான் 112 மில்லியன் டாலர்கள் செலுத்தி 2வது அதிகபட்ச தொகைக்கு ஆர்சிபி அணியை வாங்கினேன். பெங்களூரு அணி களத்தில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் ஒரு சிறந்து விளங்கும் பிராண்டாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனாலேயே எங்களின் அதிகம் விற்பனையாகும் மதுபான பிராண்டுகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ்’க்கு தைரியமான அடையாளத்தைக் கொடுக்கும் வகையில் பெயரில் இணைத்தேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: கே.எல் ராகுல் வேணாம்.. சாய் சுதர்சன் ஓப்பனரா ஆடட்டும்.. காரணத்துடன் விவரித்த – ரிக்கி பாண்டிங்
இதைப் பார்க்கும் பெங்களூரு அணி ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மக்கள் பணத்தை வங்கியில் கடனாக வாங்கிச் சென்ற நீங்கள் எப்போது அதை செலுத்துவீர்கள்? என்று எதிரணி ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள். மொத்தத்தில் மதுபானத்தின் பிராண்ட் பெயரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.