கே.எல் ராகுல் வேணாம்.. சாய் சுதர்சன் ஓப்பனரா ஆடட்டும்.. காரணத்துடன் விவரித்த – ரிக்கி பாண்டிங்

Ponting and Sudharsan
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்ட வேளையில் மும்பை விமான நிலையத்திலிருந்து முதன்மை இந்திய அணியானது இங்கிலாந்து நாட்டிற்கும் புறப்பட்டு சென்று விட்டது.

சாய் சுதர்சன் துவக்க வீரராக விளையாட வேண்டும் : ரிக்கி பாண்டிங்

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற அனுபவ வீரர்கள் இல்லாததால் இம்முறை இளம் வீரர்களை கொண்ட அணியே அங்கு விளையாட உள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு தற்போது மிகப்பெரிய சவால் வாய்ந்த தொடராக மாறியுள்ளது.

- Advertisement -

அதோடு இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரிலும் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சாய் சுதர்சனுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். ஜெய்ஸ்வாலுடன் கே.எல் ராகுலை துவக்க வீரராக களமிறக்காமல் சாய் சுதர்சனை களமிறக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இடதுகை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் தற்போது மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் உள்ளார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி அவருடைய பேட்டிங் டெக்னிக் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்க்கு ஏதுவாக இருக்கும். அதேபோன்று கே.எல் ராகுல் அல்லது கருண் நாயர் போன்ற வீரர்களில் ஒருவர் மூன்றாவது இடத்தில் விளையாடலாம். கே.எல் ராகுலை பொருத்தவரை அவர் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த வீரர்.

இதையும் படிங்க : சுப்மன் கில் அடுத்த 10 வருஷத்துக்கு தொடர்ந்து கேப்டனாக இருக்கனும்னா இதை செய்யனும் – ரிக்கி பாண்டிங் கருத்து

என்பதனால் அவர் நடு வரிசையில் விளையாடினால் இந்திய அணிக்கு உறுதி தன்மை கிடைக்கும். எனவே சாய் சுதர்சனை துவக்க வீரராகவும், கே.எல் ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கினால் அது இந்திய அணிக்கு நல்லது என்று நினைக்கிறேன் என ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement