பும்ரா மாதிரி இந்திய பவுலர்கள் உருவாக அவர் தான் காரணம்.. வெர்னோன் பிளாண்டர் பாராட்டு

Vernon Philander
- Advertisement -

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா தொடரை சமன் செய்துள்ளது. அந்த வெற்றிக்கு மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

குறிப்பாக ஃபிளாட்டான பிட்ச்சில் ஓலி போப், பென் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்களின் ஸ்டம்ப்புகளை துல்லியமான யார்க்கர் பந்தால் தெறிக்க விட்ட அவர் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் படைத்தார். அத்துடன் தற்போது ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலர் இடத்தைப் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் பும்ரா படைத்துள்ளார்.

- Advertisement -

தரமான பும்ரா:
அத்துடன் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வகையான ஐசிசி கிரிக்கெட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் பவுலர் என்ற தனித்துவமான உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் சமீப காலங்களில் ஜஸ்பிரித் பும்ரா போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாவதற்கு 2014 – 2021 வரை கேப்டனாக இருந்த விராட் கோலி முக்கிய காரணமாக இருந்ததாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் வெர்னோன் பிளாண்டர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு முறையும் தென்னாப்பிரிக்காவுக்கு வரும் போது இந்திய அணி கடந்த சுற்றுப்பணத்தை விட முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய துணை கண்டத்தில் ஸ்பின்னர்கள் வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது அதையும் தாண்டி ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வென்றதை பார்ப்பது நன்றாக இருக்கிறது”

- Advertisement -

“அது தரமான வேகப்பந்து வீச்சாளர்களை அவர்கள் உருவாக்கி வருவதற்கான நேர்மறையான அறிகுறியாகும். அது கேப்டனின் ஆதரவால் நடைபெறுகிறது. குறிப்பாக விராட் கோலி தன்னுடைய பவுலர்கள் பல்வேறு சூழ்நிலைகளுக்கு சென்று கற்றுக்கொண்டு முன்னேறுவதற்கு தேவையான ஆதரவை கொடுத்த வலுவான தலைவராக இருந்தார். பும்ரா தற்போது முழுமையான பவுலராக உள்ளார்”

இதையும் படிங்க: பும்ராவுக்கு ரெஸ்ட் கொடுங்க.. ஆனா அதுல சின்ன மாற்றத்தை செய்ங்க.. ஹர்ஷா போக்லே கோரிக்கை

“அவர் தற்போது நல்ல லைன், லென்த்தை தொடர்ச்சியாக பிடித்து வீசும் திறமையை கொண்டுள்ள காரணத்தாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்படுகிறார். ஆரம்பத்தில் அவர் அனைத்து நேரங்களிலும் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பந்துகளை வீசியதால் ரன்களை வழங்கினார். ஆனால் தற்போது அவர் அதை கட்டுப்படுத்தி தொடர்ச்சியாக பந்து வீசும் திறமையை கற்றுக் கொண்டுள்ளார்” என்று கூறினார்.

Advertisement