பும்ராவுக்கு ரெஸ்ட் கொடுங்க.. ஆனா அதுல சின்ன மாற்றத்தை செய்ங்க.. ஹர்ஷா போக்லே கோரிக்கை

harsha bhogle
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் வென்ற இந்திய அணி தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து இத்தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்குகிறது. அதில் கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாடுவார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. அதே போல முதல் இரண்டு போட்டிகளில் சொந்த காரணங்களுக்காக விலகிய விராட் கோலியும் அப்போட்டியில் களமிறங்குவாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

- Advertisement -

பும்ராவின் ஓய்வு:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக மூன்றாவது போட்டியில் ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் ஏற்கனவே முகமது சிராஜ், முகேஷ் குமார் போன்ற இதர வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறி வரும் நிலையில் பும்ரா மட்டுமே சிறப்பாக விளையாடி இரண்டாவது போட்டியில் 9 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

எனவே அப்படிப்பட்ட அவரும் மூன்றாவது போட்டியில் வெளியேறினால் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்படும் என்றே சொல்லலாம். இந்நிலையில் ராஜ்கோட் மைதானம் கிட்டத்தட்ட விசாகப்பட்டினம் போலவே பவுலிங்க்கு சவாலாக இருக்கும் என்று பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். எனவே ஏற்கனவே 3வது போட்டிக்கு 10 நாட்கள் இடைவெளி இருப்பதால் அப்போட்டியில் பும்ரா விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

அதே சமயம் 4வது போட்டி நடைபெறும் ராஞ்சி மைதானம் ஓரளவு சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதில் பும்ராவுக்கு ஓய்வு கொடுப்பதே இந்திய அணிக்கு நன்மையை பயக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஒருவேளை இந்தியா பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க விரும்பினால் அவர்கள் மற்ற பந்து வீச்சாளர்கள் அதிக வலிமை பெறும் மைதானத்தில் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: முதல் டெஸ்ட் தோல்வியிலிருந்து.. அவரை தவிர்த்து யாருமே பாடம் கத்துக்கல.. இந்திய வீரர்களை விளாசிய கவாஸ்கர்

“பேட்டிக்கு சாதகமான மைதானத்தில் பும்ராவின் திறமையை மற்ற பவுலர்களால் நிரப்புவது அசாத்தியம். ராஜ்கோட் மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும். மறுபுறம் பும்ரா ஏற்கனவே ஒரு வாரம் ஓய்வு பெறுகிறார். எனவே அவரை ராஜ்கோட் போட்டியில் விளையாட வைப்பது நல்ல ஐடியாவாக இருக்கும். ராஞ்சியில் அவருக்கு ஓய்வு கொடுத்து கடைசி போட்டி நடைபெறும் தரம்சாலா போட்டிக்கு தயார் செய்யலாம்” என்று கூறியுள்ளார்.

Advertisement