முதல் டெஸ்ட் தோல்வியிலிருந்து.. அவரை தவிர்த்து யாருமே பாடம் கத்துக்கல.. இந்திய வீரர்களை விளாசிய கவாஸ்கர்

Sunil Gavaskar 2
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக விறுவிறுப்பாக துவங்கியுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் வென்றது. அதனால் தொடரை சமன் செய்துள்ள இந்தியா சொந்த மண்ணில் அவ்வளவு எளிதாக நாங்கள் சாய்ந்து விட மாட்டோம் என்ற வகையில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து கம்பேக் கொடுத்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

இருப்பினும் இந்த தொடரில் சொந்த மண்ணிலேயே முக்கிய பேட்ஸ்மேன்கள் திண்டாட்டமாக செயல்பட்டு வருவது இந்திய அணிக்கு பின்னடைவாகவே இருந்து வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸில் சதமடிக்காமல் இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்கள் கூட சேசிங் செய்ய முடியாமல் திணறியது தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

கவாஸ்கர் அதிருப்தி:
அதை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் மற்ற பேட்ஸ்மமேன்கள் 35 ரன்கள் கூட அடிக்காமல் பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் அப்போது எதிர்ப்புறம் ஜெய்ஸ்வால் தனி ஒருவனாக இரட்டை சதமடித்து 209 ரன்கள் குவித்ததால் தப்பிய இந்தியா கடைசியில் பவுலர்களின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றியும் கண்டது.

இந்நிலையில் முதல் போட்டியில் சந்தித்த தோல்வியிலிருந்து ஜெய்ஸ்வால் மட்டுமே விரைவாக பாடத்தை கற்றுக் கொண்டதாக சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட இதர இந்திய பேட்ஸ்மேன்கள் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என விமர்சிக்கும் அவர் இது பற்றி மிட்-டே பத்திரிகையில் கூறியுள்ளது பின்வருமாறு. “யசஸ்வி ஜெய்ஸ்வால் தன்னை வேகமாக கற்றுக் கொள்ளக் கூடியவர் என்பதை காண்பித்தார்”

- Advertisement -

“குறிப்பாக முதல் போட்டியில் 80 ரன்களில் அவுட்டாகி சதத்தை தவற விட்ட அவர் இரண்டாவது போட்டியில் அந்த தவறை செய்யாமல் அபாரமான இரட்டை சதமடித்தார். அந்தப் போட்டியில் ஒருவர் நங்கூரமாக நின்று பெரிய சதமடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் போட்டியை போலவே இரண்டாவது போட்டியிலும் தங்களுடைய விக்கெட்டை பரிசாக கொடுத்தார்கள்”

“டி20 கிரிக்கெட்டின் வருகையால் இந்திய பேட்ஸ்மேன்களின் பொறுமை பாதிக்கப்பட்டுள்ளதாக கருகிறேன். அதன் காரணமாக அவர்கள் எதிர்பாராத ஷாட்டுகளை அடித்து அவுட்டானார்கள். குறிப்பாக நம்மால் வித்தியாசமான ஷாட்டை அடித்து அழுத்தத்திலிருந்து நம்மால் வெளிவர முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். ஆனால் அப்படி விளையாடி அவர்கள் கடைசியில் அவுட்டாகிறார்கள். 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ஓலி போப் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் வெற்றியை மாற்றக்கூடிய இன்னிங்ஸ் விளையாட முடியும் என்பதை காண்பித்துள்ளார்கள்” என்று கூறினார்.

Advertisement