ரசிகர்கள் இல்லனா நீங்க இல்ல, தில்லாலங்கடி வேலையை நிறுத்துமாறு பிசிசிஐ – ஜெய் ஷா’வை தைரியமாக விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்

Venkatesh Prasad
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. அந்த எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்வியை நிறுத்துமா எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அப்படி சொந்த மண்ணில் இந்தியா சரித்திரம் படைக்குமா என்பதை பார்ப்பதற்காகவும் நீண்ட வருடங்கள் கழித்து சொந்த ஊரில் நடைபெறும் இந்த உலகக்கோப்பை நேரில் சென்று காண்பதற்காகவும் இத்தொடருக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாக போராடி வருகிறார்கள் என்று சொல்லலாம்.

- Advertisement -

தில்லாலங்கடி வேலை:
ஆம் முதலில் இத்தொடருக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படாது என்றும் கவுன்டர்களில் அடித்துக் கொண்டு தான் ரசிகர்கள் வாங்க வேண்டும் என்ற வகையில் பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இந்த நவீன யுகத்தில் டிஜிட்டல் இந்தியா என்று மார் தட்டும் அரசியல் வாரிசான ஜெய் ஷா பிசிசிஐ தலைவராக இருந்தும் ஆன்லைன் டிக்கெட் கிடையாதா என ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐசிசி காதுகளுக்கும் சென்ற நிலையில் ஒரு வழியாக “புக்மைஷோ” எனும் இணையத்தின் வாயிலாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கும் முறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது.

ஆனால் அதில் விண்ணப்பித்த பின் பல ரசிகர்கள் பல மணிநேரங்கள் முன்னே பின்னே நகராமல் அப்படியே காத்திருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள். ஒருவேளை பேக் பட்டனை அழுத்தி பின்னே சென்றுவிட்டால் மீண்டும் புதிதாக விண்ணப்பித்து புதிதாக காத்திருக்க வேண்டும் என்று அந்த இணையத்தில் காட்டப்பட்டது ரசிகர்களை கடுப்பாக்கியது. அதனால் நாங்கள் குப்பையா என்று விமர்சித்த ரசிகர்கள் அப்படி காத்திருந்தும் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்று விமர்சித்தனர்.

- Advertisement -

அதை விட பிளாக்கில் விற்பதற்காகவும் பணக்காரர்களுக்கு கொடுப்பதற்காகவும் பிசிசிஐ உத்தரவின் பேரில் அந்த இணையத்தில் வேண்டுமென்றே செயற்கையாக புரோகிராம் செய்யப்பட்டு முன்கூட்டியே விக்கெட்டுகள் வெற்றி தீர்ந்ததாக காண்பிக்கப்பட்டதாக ரசிகர்கள் ஆதாரங்களுடன் நிரூபித்தனர். இந்நிலையில் ரசிகர்கள் இல்லையென்றால் பிசிசிஐ இல்லை என்பதை புரிந்து கொண்டு இந்த தில்லாலங்கடி வேலைகளை செய்யாமல் நியாயமான முறையில் டிக்கெட்டுகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்துள்ளார்.

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பொதுவாக உலகக் கோப்பை டிக்கெட் வாங்குவது சுலபமல்ல. ஆனால் இப்போது முன்பை விட கடினமாக இருக்கிறது. டிக்கெட்களை வாங்குவதற்கு ரசிகர்கள் சந்திக்கும் இன்னல்களை நினைத்து நான் வருந்துகிறேன். இந்திய கிரிக்கெட்டின் முதன்மை பங்குதாரர்களான அவர்கள் எளிதாக டிக்கெட் பெறுவதற்கு பிசிசிஐ வழி செய்ய வேண்டும். உலகக்கோப்பை டிக்கெட் விற்பனையில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். ரசிகர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது”

இதையும் படிங்க: IND vs NEP : பவுலிங்கில் விட்டாலும் பேட்டிங்கில் நேபாளை நொறுக்கிய இந்தியா – மழையை தாண்டி வென்றது எப்படி, சூப்பர் 4க்கு சென்றதா?

“குறிப்பாக 1 லட்சம் ரசிகர்கள் அமரக்கூடிய அகமதாபாத் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு குறைந்தபட்சம் 8500க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் இருக்க வேண்டும். அதே போல மற்ற எல்லா போட்டிகளுக்கும் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்க வேண்டும். எனவே கார்ப்பரேட்டுகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பெரிய தொகையை ஒதுக்குவதற்கு பதிலாக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்தால் நிறைவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Advertisement