எல்லாரும் தப்பா நினைச்சுட்டாங்க, சின்ன வயசுல இருந்தே அவர தெரியும் நான் எல்லை மீறி பேசல – வெங்கடேஷ் பிரசாத்

venkatesh-prasad
- Advertisement -

கர்நாடகவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் 2014ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் இருப்பினும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி 2019 வாக்கில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்தார். ஆனால் நாளடைவில் 17 கோடி என்ற உச்சத்தை தொட்ட தனது ஐபிஎல் மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் அவர் அணியின் வெற்றியைத் தாண்டி சுயநலத்துடன் விளையாடுவதாக பல ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர்.

KL-Rahul

- Advertisement -

மேலும் இந்திய அணிக்கும் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் கடந்த ஒரு வருடமாகவே கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் துணை கேப்டன்ஷிப் பதவி மற்றும் ஓப்பனிங் இடத்தை இழந்து ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கடந்த ஒரு வருடமாக சதமடிக்காமல் இருந்து வரும் அவரை முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் ஆதாரப்பள்ளி விவரங்களுடன் சரமாரியாக விளாசினார்.

தப்பா நினைக்காதீங்க:
குறிப்பாக 8 வருடங்கள் விளையாடி 40க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டிருந்தும் தொடர்ந்து வாய்ப்பு பெறும் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று தெரிவித்த அவர் உங்களால் சர்ஃப்ராஸ் கான், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களின் கேரியர் வீணடிக்கப்படுவதாக விமர்சித்தார். அவரது தொடர் விமர்சனங்களால் பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் கடைசி 2 போட்டிகளில் நீக்கப்பட்ட ராகுல் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் தான் மேற்கொண்டு வாய்ப்புகளை பெற முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Venkatesh-Prasad

அந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் 75* ரன்கள் குவித்த ராகுல் இந்தியாவை வெற்றி பெற வைத்ததால் அனைவரும் சேர்ந்து வெங்கடேஷ் பிரசாத்தை கலாய்த்தனர். இந்நிலையில் சொந்த விருப்பு வெறுப்புக்காக ராகுலை விமர்சிக்கவில்லை என்று தெரிவிக்கும் வெங்கடேஷ் பிரசாத் சர்ப்ராஸ் கான், சுப்மன் கில் போன்ற சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத நியாயத்தை வரைமுறைக்குட்பட்டு பேசியதை சிலர் தவறாக எடுத்துக் கொண்டதாக கூறியுள்ளார். அத்துடன் அண்டர்-19 அளவிலிருந்தே தெரியும் ராகுல் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அக்கறையுடன் தான் விமர்சித்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் யாருக்கு எதிராகவும் இல்லை. மாறாக என்ன நினைத்தேனோ அதை பேசினேன். சிலர் அதை ஏற்றுக் கொண்டனர் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. அது அவர்களுடைய விருப்பமாகும். மேலும் நான் கேஎல் ராகுல் பற்றி மட்டுமே பேசவில்லை. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் சர்ப்ராஸ் கானுக்காகவும் பேசினேன். எனது விமர்சனங்கள் எளிமையாகவும் எல்லை மீறாமல் தான் இருந்தன. ஆனால் சிலர் அதை வேறு வகையில் எடுத்துக் கொண்டு விமர்சித்தனர். அத்துடன் கேஎல் ராகுல் மீது நான் நல்ல மதிப்பு மற்றும் மரியாதையை வைத்துள்ளதை புரிந்து கொள்ளுங்கள்”

Venkatesh prasad KL rahul

“அண்டர்-19 அளவிலிருந்தே அவரை எனக்கு சுமார் 15 வருடங்கள் நன்றாக தெரியும். குறிப்பாக கர்நாடகா, தேசிய என்சிஏ மற்றும் இந்திய அணி என பல நிலைகளில் அவருடன் இணைந்து பணியாற்றிய நான் அவரை நான் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். ஆனால் அவரிடம் இருக்கும் திறமைக்கு அதிகப்படியான அதிக நாட்கள் அதிகமான வாய்ப்பு கிடைத்தும் அசத்தவில்லை. இருப்பினும் வரும் மாதங்களில் அவர் அசத்துவார் என்று நம்புகிறேன். அதே சமயம் நான் அவரது மனதை உடைக்கும் வகையில் எதையும் பேசவில்லை. எனது மனதில் தோன்றியதை பேசினேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க:நரேந்திர மோடி ஐயா தான் மனசு வைக்கனும். வெளிப்படையாக வேண்டுகோளை முன்வைத்த – ஷாஹித் அப்ரிடி

முன்னதாக ஃபார்முக்கு திரும்ப ஐபிஎல் தொடரை புறக்கணித்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட முடியுமா என்று அக்கறையுடன் கேட்டுக் கொள்வதாக தெரிவித்திருந்த வெங்கடேஷ் பிரசாத் மும்பையில் இந்தியாவை வெற்றி பெற வைத்ததும் முதல் ஆளாக கேஎல் ராகுலை அதே ட்விட்டரில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement