நரேந்திர மோடி ஐயா தான் மனசு வைக்கனும். வெளிப்படையாக வேண்டுகோளை முன்வைத்த – ஷாஹித் அப்ரிடி

Afridi
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடரானது நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிறது. இருநாட்டு அரசுகளுக்கும் இடையே நல்லுறவு இல்லாததன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இருதரப்பு போட்டிகள் நடைபெறுவதில்லை. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியால் நடத்தப்படும் உலக கோப்பைத் தொடர், ஆசிய கோப்பை தொடர், டி20 உலக கோப்பை என பொதுவான தொடர்களில் மட்டுமே இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்து மோதி வருகின்றன.

VIrat Kohli IND vs PAK

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு கிரிக்கெட் தொடரை நடத்துமாறு பல்வேறு முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர். அதேபோன்று இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெற வேண்டும் என்றும் ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடர் நடைபெறாமல் இருந்து வருகிறது.

- Advertisement -

மேலும் பிசிசிஐ இதுகுறித்து எந்த ஒரு பேச்சுக்கும் இடமில்லை என்ற கருத்தையே தெரிவித்து வருகிறது. அதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பொதுவான தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடரை நடத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாகித் அப்ரிடி வேண்டுகோள் ஒன்றினை வைத்துள்ளார்.

VIrat Kohli IND vs PAK.jpeg

தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் லெஜென்ட்ஸ் லீக் தொடரில் விளையாடி வரும் அவர் அந்த தொடரின் ஒரு போட்டிக்கு பின்னர் பேசுகையில் : நாம் ஒருவருடன் ஒருவர் நட்பு கொள்ள விரும்பும்போது அவர் அவர்கள் நம்மிடம் பேசவில்லை என்றால் என்னதான் செய்ய முடியும். பிசிசிஐ ஒரு சக்தி வாய்ந்த கிரிக்கெட் வாரியம். உங்களால் நிச்சயம் சில முடிவுகளை எடுக்க முடியும். அப்படி எடுக்கும் போது ரசிகர்களை மனதில் வைத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகளை அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியில் எனக்கு இப்போதும் நண்பர்கள் உள்ளனர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களை சந்திக்கிறேன். சமீபத்தில் கூட சுரேஷ் ரெய்னாவை சந்தித்து அவரிடம் ஒரு பேட் கேட்டேன் அவரும் கொடுத்தார். எங்களுக்குள் உறவு நன்றாகத்தான் இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரை நடத்துவது குறித்து இருநாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

இதையும் படிங்க : வாய்ப்பிருந்தும் இப்டி தடவலாக செயல்பட்டால் அப்றம் உலக கோப்பை எங்களுக்கு தான் – இந்தியாவை எச்சரிக்கும் மைக்கேல் வாகன்

மேலும் இரு நாட்டு அரசாங்கத்திடமும் அனுமதி கிடைத்தால் இந்த தொடரானது நிச்சயமாக நடக்கும். எனவே இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியை நடத்த இந்திய பிரதமர் மோடியை அனுமதிக்குமாறு நான் கேட்டுக் கொள்ளக் கொள்கிறேன் என தனது வேண்டுகோளை அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement