வாய்ப்பிருந்தும் இப்டி தடவலாக செயல்பட்டால் அப்றம் உலக கோப்பை எங்களுக்கு தான் – இந்தியாவை எச்சரிக்கும் மைக்கேல் வாகன்

Michael-Vaughan and IND Team
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக ஜொலிக்கும் இந்தியா ஒரு காலங்களில் ஐசிசி உலக கோப்பைகளில் லீக் சுற்றை தாண்டுவதற்கே திண்டாடும். ஆனால் கங்குலி, தோனி ஆகிய மகத்தான கேப்டனின் வருகையால் அனைத்து அடிப்படைகளையும் பூர்த்தி செய்து இப்போதெல்லாம் ஐசிசி உலகக் கோப்பைகளில் நாக் அவுட் சுற்றுக்கு சர்வ சாதாரணமாக தகுதி பெறும் இந்தியா அந்த மிகப்பெரிய அழுத்தம் நிறைந்த போட்டியில் ஏதோ ஒரு வகையில் சொதப்பி வெற்றியையும் எதிரணியும் தாரை வார்த்து வருகிறது. குறிப்பாக 2013க்குப்பின் தொடர்ந்து ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து தோற்று வரும் அதே இந்திய அணி இருதரப்பு தொடர்களில் மட்டும் எதிரணிகளை தெறிக்க விட்டு ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியாக திகழ்ந்து வருவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது.

INDia

- Advertisement -

இத்தனைக்கும் ஐசிசி தொடர்களை விட அழுத்தம் வாய்ந்த தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் நிறைந்தும் ஒரு ஐசிசி நாக் அவுட் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியாமல் இந்தியா திணறுவது ரசிகர்களை வேதனையடைய வைக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த டி20 உலக கோப்பையில் இங்கிலாந்தின் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது ரசிகர்களுக்கு வேதனையை கொடுத்தது.

வாகன் எச்சரிக்கை:
இந்நிலையில் போதியயளவு அற்புதமான திறமை நிறைந்த வீரர்களை கொண்டிருந்தும் அழுத்தமான போட்டிகளில் தைரியமாக ஆக்ரோசமாக அடித்து நொறுக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்த தவறுவதே உலகக் கோப்பைகளில் இந்தியாவின் தோல்விகளுக்கு காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருந்தாலும் இந்தியா ஆக்ரோசமாக செயல்பட தவறும் பட்சத்தில் இங்கிலாந்து போன்ற அணிகள் கோப்பையை வென்று விடும் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

ENg vs IND Jos Buttler Alex hales

“2023 உலகக் கோப்பை வெல்வதற்கு இந்தியா அதிக வாய்ப்புள்ளது என்று நீங்கள் சொல்வீர்கள். ஏனெனில் அது இந்தியாவின் சொந்த மண்ணில் நடைபெறுகிறது. ஆனால் அதில் உண்மையாகவே வெற்றி பெறுவதற்கு அவர்கள் இன்னும் சற்று பேட்டிங்கில் அதிரடியாகவும் பந்து வீச்சில் ஆக்ரோசமாகவும் செயல்பட வேண்டும். சமீப காலங்களில் அந்த அணுகு முறையில் அவர்கள் விளையாடுகிறார்கள். எனவே அதே ஸ்டைலை அவர்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரை அதிகப்படியான திறமையும், சக்தியும் கொண்டுள்ள இந்தியா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நீண்ட காலமாக குறைவாகவே சாதித்துள்ளது”

- Advertisement -

“குறிப்பாக தற்போதைய இந்திய அணி இவ்வளவு நாட்களாக உலக கோப்பை இல்லாமல் இருப்பதற்கான எந்த காரணமும் இல்லை. என்னை கேட்டால் அவர்கள் இந்நேரம் நிறைய சாதித்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்களிடம் அதிகப்படியான திறமை இருக்கிறது. எனவே இந்த உலகக் கோப்பையில் சரியான ஸ்டைலில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் எவ்வளவு தைரியமாக செயல்படுகிறார்கள் என்பதை பொருத்தே இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றி இருக்கும்”

vaughan

“அதே சமயம் 2019 உலகக்கோப்பை வென்ற கால சூழ்நிலைகள் வித்தியாசமானது என்றாலும் இந்த உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் நான் சொல்வேன். அவர்களிடம் நல்ல ஸ்பின்னர்களும் சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் நல்ல வீரர்களும் இருக்கின்றனர். அதே போல் வேரியேஷன்களை கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களும் இருக்கின்றனர். குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் காயத்திலிருந்து வந்துள்ளது பெரிய பலமாகும்”

இதையும் படிங்க:2017இல் அனில் கும்ப்ளேவுக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பு வந்தும் மறுத்தது ஏன்? சேவாக் விளக்கம்

“மேலும் மார்க் வுட் 90 மைல் வேகத்தில் வீசக்கூடியவர். எனவே இங்கிலாந்திடம் நல்ல அனுபவம் இருந்தாலும் இந்தியா அதற்கு அச்சுறுத்தலை கொடுக்கும் அணியாகவே இருக்கிறது. எனவே பயப்படாமல் அடித்து நொறுக்கும் ஸ்டைலை பின்பற்றும் பட்சத்தில் இந்தியா தங்களது சொந்த மண்ணில் எந்த அணியாலும் சாய்க்க முடியாத வலுவான அணியாக கோப்பை வெல்வதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Advertisement